search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சின்மயி சொன்ன புகார்களில் உண்மை இருப்பது தெளிவாக தெரிகிறது - வரலட்சுமி பேட்டி
    X

    சின்மயி சொன்ன புகார்களில் உண்மை இருப்பது தெளிவாக தெரிகிறது - வரலட்சுமி பேட்டி

    பாலியல் தொல்லை பற்றிய மீ டூ இயக்கத்தில் பலரும் புகார் தெரிவித்து வரும் நிலையில், சின்மயி சொன்ன புகார்களில் உண்மை இருப்பது தெளிவாக தெரிகிறது என்று நடிகை வரலட்சுமி கூறினார். #MeToo #TimesUp #Varalakshmi
    லிங்குசாமி இயக்கத்தில் விஷால் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சண்டக்கோழி-2. படத்தில் நடிகை வரலட்சுமி வில்லியாக நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    எனக்கு கதாநாயகியாக மட்டுமே நடிப்பதில் ஆர்வம் இல்லை. வித்தியாசமான வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன். அப்படித் தான் சண்டக்கோழி-2, சர்கார் படங்கள் அமைந்தன.

    ‘மீ டூ’ இயக்கம் இப்போது தான் வந்துள்ளது. ஆனால் நான் போன வருடத்தில் இருந்தே இதை பற்றி பேசி வருகிறேன். சேவ்சக்தி என்ற அமைப்பையும் பெண்கள் பாதுகாப்புக்காக தொடங்கினேன்.



    பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அநியாயங்களை பேச தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில் இவ்வளவு நடந்திருக்கிறதா என்ற வருத்தமும் ஏற்படுகிறது.

    ஒரு பெண் சமூகத்தில் இருக்கும் நல்ல பெயரை பணயமாக வைத்து தான் தனக்கு நேர்ந்ததை பகிர்கிறார். எனவே அவரது வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். நாம் அவர்களை சந்தேகப்பட கூடாது.

    இது சினிமாவில் மட்டுமல்ல. உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கூட நடந்திருக்கலாம். எனக்கு கூட நடந்திருக்கிறது. ஏன் இப்போது சொல்கிறீர்கள்? ஏன் அவரை சொல்கிறீர்கள்? என்ற கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. பெண்களுக்கு பல வி‌ஷயங்களில் தயக்கம் இருந்திருக்கலாம்.

    ஒரு பெண் இந்த அளவுக்கு தன்னை தாழ்த்திக்கொண்டு விளம்பரம் தேடுவாரா என்றும் பார்க்க வேண்டும். வரும் கதைகள் எல்லாம் முழு விபரங்களுடன் வருகிறது. சின்மயி சொன்ன புகார்களில் உண்மை இருப்பது தெளிவாக தெரிகிறது.



    பார்ப்பவர்கள் எல்லோரும் நல்லவர் அல்ல. நல்லவர் போல நடிப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். எல்லாம் தெரிந்தும்கூட ஒன்றுமே தெரியாதவர்கள் போல நடிக்கிறார்கள். சின்மயிக்கு கூட மிகச் சிலரே ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

    அடுத்து வருபவர்களாவது பாதிப்பில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கிறோம்.

    இந்த புகார்களுக்காக மத்திய அரசு எல்லா மாநிலங்களிலுமே தனி கோர்ட்டு அமைத்திருக்கிறது.

    ப:- இல்லை. நான் நடித்தால் ஜெயலலிதா வேடத்தில் மட்டுமே நடிப்பேன். சசிகலா வேடத்தில் நடிக்க மாட்டேன்.

    நான் அரசியலுக்கு வருவேன். ஆனால் இப்போது இல்லை. எனக்கான நேரம் வர வேண்டும். அப்பா கட்சியில் சேரமாட்டேன். அரசியலை நோக்கி நான் செயல்படவில்லை.

    கற்பழிப்புக்கு தண்டனையை அதிகப்படுத்த வேண்டும். சவுதியில் உள்ளது போன்ற கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேட்டி அளித்தார். #MeToo #TimesUp #Varalakshmi #Chinmayi

    Next Story
    ×