search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    காதல் காட்சிகளில் வரலட்சுமி சகஜமாக நடித்தார் - விவேக் ராஜ்கோபால்
    X

    காதல் காட்சிகளில் வரலட்சுமி சகஜமாக நடித்தார் - விவேக் ராஜ்கோபால்

    `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் விவேக் ராஜகோபால், புதுமுக நடிகர் என்று பார்க்காமல் காதல் காட்சிகளில் வரலட்சுமி சகஜமாக நடித்தார் என்று கூறியுள்ளார். #Echcharikkai #VivekRajagopal
    `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தில் நாயகனாக நடித்த விவேக் ராஜகோபால் நடிகர்கள் சத்யராஜ் மற்றும் கிஷோரிடம் இருந்து நிறையவே கற்றுக் கொண்டதாக கூறினார். 

    மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்த சர்ஜுன்.கே.எம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `எச்சரிக்கை'. சத்யராஜ், கிஷோர், விவேக் ராஜகோபால், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளனர். விவேக் அறிமுக நடிகராக இருந்தாலும், அனுபவ நடிகரான கிஷோருடன் ஈடு கொடுத்து நடித்திருப்பார்.

    படவாய்ப்பு பற்றி விவேக் ராஜகோபால் பேசும்போது,

    " சினிமா ஆசை விடாமல் என்னைத் துரத்தியது. கூத்துப் பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்றேன், எனக்கும் பயிற்சி அளித்தவர்  ஜோக்கர் பட நாயகன் சோமசுந்தரம். நல்லதொரு சினிமா வாய்ப்புக்காகச் சில ஆண்டுகள் காத்திருந்தேன். இந்தப் படம் `எச்சரிக்கை` உருவாக இருப்பது அறிந்து இயக்குநர் சர்ஜுனை விடாமல் துரத்தினேன். அவர் நடிகர்களைத் தேர்வு செய்யும் போது நானும் கூடவே இருந்தேன். அது கூட எனக்கு ஒரு பாடமாக இருந்தது. இயக்குநரின் எண்ணம், எதிர்பார்ப்பு பற்றி அறிய முடிந்தது. ஒரு கட்டத்தில் அவர் என்னைத் தேர்வு செய்தார். 

    இந்தப் படத்துக்காக சுமார் 25 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். சத்யராஜ் சாருடன் நடிக்க வேண்டும். அவர் பெரிய நடிகர் அனுபவசாலி. பாகுபலி படம் அவரை எங்கோ கொண்டு போய் நிறுத்தியிருந்தது. அவர் எப்படி நடந்து கொள்வாரோ என்று தயக்கம், பயம் எனக்குள் இருந்தது. ஆனால் அவர் முதல் சந்திப்பிலேயே சகஜமாகிப் பேசிப்பழகி என்னை ஆச்சரியப்பட வைத்தார். நான் நடித்ததைப் பார்த்து இயக்குநரிடம் பாராட்டினார். அவர் பெருந்தன்மை ஆச்சரியப்பட வைத்தது. அதே போல கிஷோர் சாரும். 



    அவர் எவ்வளவு நல்ல நல்ல பாத்திரங்களில் நடிப்பவர், அவருடன் நான் இணைந்து நடிப்பது படம் முழுக்கப் பயணம் செய்வது என்பது எவ்வளவு பெரிய வாய்ப்பு. அவர் அருகில் நான் இருக்கும் போது எனக்குப் பலம் கிடைத்த உணர்வு ஏற்பட்டது. அவரிடம் நான் நிறையவே கற்றுக் கொண்டேன். நான் நடிக்கவும் இடம் தந்து ஊக்கப்படுத்தினார். அதே போல வரலட்சுமி, சினிமா பின்னணியிலிருந்து வந்தாலும் என்னைப் போன்ற புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டது பெரிய விஷயம். அது மட்டுமல்ல தாரை தப்பட்டை படத்தில் சண்டைக்காட்சியில் அவருடைய நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். 

    புது நடிகர் என்று பார்க்காமல் என்னுடன் காதல், சண்டை காட்சிகளில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். பாடல் காட்சியிலும் அதே போல ஒத்துழைத்து நடித்தார். படம் முடிந்த பின்னும் நட்பு தொடரும் அளவுக்கு திறமையான கண்ணியமான நடிகை. இப்படி ஒரே படத்தின் மூலம் மறக்க முடியாத அனுபவங்கள்.

    நான் ஒரு கதாநாயகனாக வர விரும்பவில்லை. ஒரு நடிகன், ஒரு இயக்குநரின் நடிகன் என்று அறியப்படவே ஆசை. நல்லதோ, கெட்டதோ எப்படிப்பட்ட பாத்திரமும் ஏற்கத் தயார் " என்றார். #Echcharikkai #VivekRajagopal #VaralakshmiSarathKumar

    Next Story
    ×