search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அந்த மாதிரி படங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை - ஸ்ரேயா
    X

    அந்த மாதிரி படங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை - ஸ்ரேயா

    சிறு இடைவெளிக்குப் பிறகு ‘நரகாசூரன்’ படத்தில் நடித்திருக்கும் ஸ்ரேயா, அந்த மாதிரி படங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியிருக்கிறார். #Shriya #ShriyaSaran
    நடிகை ஸ்ரேயா தற்போது சிறு இடைவெளிக்குப் பிறகு ‘நரகாசூரன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அவர் மாலைமலருக்கு அளித்த பேட்டி வருமாறு...

    நரகாசூரன் படத்தில் நடித்த அனுபவம்?

    இந்த படம் மாறுபட்ட கதையம்சம் கொண்டது. இதுவரைக்கும் இதுபோன்ற கதையில் நடித்ததில்லை. படக்குழுவினர் அனைவரும் இப்படத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் என்ஜாய் பண்ணி டீம் ஒர்க்காக வேலை பார்த்தோம்.

    இயக்குனர் கார்த்திக் நரேன் பற்றி?

    மிகவும் திறமையானவர். அவருடைய கதை, மற்றும் சொன்ன விதம் எல்லாம் சிறப்பாக உள்ளது. ரசிகர்களின் பார்வையில் அவர் நினைக்கிறதை செய்து முடிப்பார். புதுமையான இயக்குனர். திரைக்கதையை திறமையாக திட்டமிட்டு அதை வரை படமாக வரைந்து இயக்கி இருக்கிறார். இவர் எனக்கான இடத்தை கொடுத்தார்.



    நரகாசூரன் எதை சொல்ல வருகிறது?

    இப்படம் திரில்லர் படம். ஆனால், திரில்லர் மட்டும் சொல்ல வரவில்லை. இதில் காதல், மாயகதை உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது.

    இப்படத்தில் உங்கள் கதாபாத்திரம்?

    இதில் கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பக்கத்து வீட்டு பெண் போல் அனைவரும் உணர்வீர்கள். என் நண்பர் ஒருவர் சோகமாக இருக்கும்போது, நான் பேசினால் அவர்கள் சிரித்து விடுவார்கள். அதுபோல், தான் இந்த கீதாவின் கதாபாத்திரம். கதையை படிக்கும் போது என்னையே பிரதிபலிப்பதுபோல் உணர்ந்தேன்.

    இளம் இயக்குனர் படத்தில் நடிக்க எப்படி சம்மதித்தீர்கள்?

    நிறைய அறிமுக இயக்குனர் படத்தில் நடித்திருக்கிறேன். அனுபவம் வாய்ந்த இயக்குனர் படத்திலும் நடித்திருக்கிறேன். புதுமுகம், அனுபவம் எல்லாம் முக்கியம் இல்லை. அவர்கள் கதை, திரைக்கதை எப்படி சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அதில் கார்த்திக் நரேன் கதை எனக்கு பிடித்தது. அதனால் நடிக்க சம்மதித்தேன்.

    பெண் இயக்குனர்கள் பற்றி?

    நிறைய பெண்கள் திரையில் வந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், திரைக்கு பின்னாலும் அவர்கள் வர வேண்டும். பெண் விநியோகஸ்தர், பெண் கேமராமேன், இயக்குனர்கள் வர வேண்டும்.



    கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் எப்போது பார்க்கலாம்?

    கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நம்பிக்கை இல்லை. நல்ல படம், கெட்ட படம் அவ்வளவுதான். வலிமை மற்றும் புத்திசாலித்தனம் எனக்கு முக்கியம்.

    அடுத்தடுத்த படங்கள்?

    தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறேன். விரைவில் இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
    Next Story
    ×