search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்
    X

    முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்

    ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தில் பிரபல இசையமைப்பாளர் முதல் முறையாக இணைய இருக்கிறார். #Sivakarthikeyan #SK13
    சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும், ராஜேஷ்.எம் இயக்கத்தில் காமெடி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். 

    இதில் ராஜேஷ் இயக்கும் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்தது.



    என்ன அறிவிப்பாக இருக்கும் என்று பலரும் காத்துக் கொண்டிருந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஹிப்ஹாப் ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். இப்படம் மூலம் சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக இணைகிறார் ஹிப்ஹாப் ஆதி. #SK13 #Sivakarthikeyan #Nayanthara
    Next Story
    ×