search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சிவகார்த்திகேயன் பற்றி மனம்திறந்த விஜய்சேதுபதி
    X

    சிவகார்த்திகேயன் பற்றி மனம்திறந்த விஜய்சேதுபதி

    தமிழ் சினிமாவில் சரிசமமாக வளர்ந்து வரும் நடிகர்களான விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் இடையே போட்டி இருப்பதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து விஜய் சேதுபதி மனம் திறந்துள்ளார். #VijaySethupathi #Sivakarthikeyan
    எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித், தனுஷ் - சிம்பு இந்த வரிசையில் சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி என்ற இணை உருவாகி இருக்கிறதே? என்று ஒரு பேட்டியில் விஜய் சேதுபதியிடம் கேட்டதற்கு “நான் சிவாவோட நெருங்கிப் பழகியது இல்லை.

    அவரும் நானும் வெளியில் எங்கேயாவது சந்தித்தால் நல்லா பேசிக்குவோம். அன்பைப் பரிமாறிக்குவோம். அவருக்கு சினிமா பெரிய பிசினஸ். என்னைவிட வேகமா முன்னேறிக்கிட்டு இருக்கிற ஒரு மனிதர். எல்லா முன்னணி நடிகர்களையும் இதுவரை இதுபோல இணையாக பார்த்துக்கிட்டு இருந்த மக்களுக்கு இப்போதும் ஒரு இணை தேவைப்படுகிறது. தன்னால் உருவானதுதான் இந்த இணை என்பது. நாங்கள் உருவாக்கியது கிடையாது’’ என்று வெளிப்படையாக பதில் கூறி உள்ளார். #VijaySethupathi #Sivakarthikeyan
    Next Story
    ×