search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சமந்தாவின் 2வது திருமணம் போட்டோ ரகசியமாக லீக்
    X

    சமந்தாவின் 2வது திருமணம் போட்டோ ரகசியமாக லீக்

    தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக் கொண்ட சமந்தா, தற்போது 2வது திருமணம் நடந்த போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. #Samantha
    தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் ‘பானா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமான இவர், ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘அஞ்சான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் விஜய்யுடன் மட்டும் ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இவர் நாகார்ஜுனாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 



    இவர் தன்னுடைய ரசிகர்களிடையே அடிக்கடி ட்விட்டர் பக்கத்தில் பேசி வருவார். தற்போது ரசிகர் ஒருவர் சமந்தாவின் போட்டோவை தனியாக போட்டோஷாப்பில் ஒர்க் செய்து திருமணம் செய்ததுபோல் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இதை ஒருவர் பகிர, இதற்கு சமந்தா, ‘இந்த விஷயம் கடந்த வாரம் நடந்தது. எப்படி இந்த போட்டோ லீன் ஆனது என்று தெரியவில்லை. இது கண்டதும் காதலாக உருவான விஷயம்’ என்று கூறியிருக்கிறார். 
    Next Story
    ×