search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அன்புமணி ராமதாஸுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு தயார் - சிம்பு
    X

    அன்புமணி ராமதாஸுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு தயார் - சிம்பு

    சினிமா படங்களுக்கு எழுந்து வரும் பிரச்சனைகளை அன்புமணி ராமதாஸுடன் கேட்கும் கேள்விகளுக்கு நேருக்குநேர் விவாதத்திற்கு தயார் என்று நடிகர் சிம்பு கூறியிருக்கிறார். #STR #Simbu
    ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், படத்திற்கு `மாநாடு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    அரசியலை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருப்பதாக வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இது எஸ்.டி.ஆரின் மாநாடு என்றும், வெங்கட் பிரபுவின் அரசியல் என்றும் வெங்கட் பிரபு அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு வேகமாக பரவியுள்ளது.

    இதுகுறித்து நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் அடுத்ததாக நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படத்தின் தலைப்பு அனைவருக்கும் பிடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இந்த கூட்டணி உருவாக வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசைப்பட்டு வந்தேன். மாநாடு என்று தலைப்பு வைத்ததால் நான் அரசியலுக்கு வருவேன் என்று நினைக்காதீர்கள். ஆனால், படத்தில் அரசியல் இருக்கிறது. 

    பொதுவாக தமிழ் சினிமா படங்களுக்கு நிறைய கருத்து, பிரச்சனைகள் எழுந்து வருகிறது. விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஏன் புகைப்பிடிக்கும் காட்சி வருகிறது என்று பிரச்சனை வந்தது. அங்கிள் அன்புமணி ராமதாஸ் கேட்டிருந்தார். இதப்பற்றி விவாதிக்கும் போது, நான் எதாவது சொல்லி தப்பாகி விடும். இதுபற்றி விவாதம் நடந்தால் கூட நான் பேச தயார் என்று அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே சொல்லியிருந்தார். 



    ஒரு விவாத மேடையில் அங்கிள் அன்புமணி ராமதாஸ் வந்து கேள்வி கேட்டால், சினிமா சார்பாக நான் பேச தயாராக இருக்கிறேன். அதுதான் சிறந்த வழியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கிருந்தாலும் நான் செல்ல தயார். ஏனென்றால் இது போன்ற பிரச்சனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது முற்றுப்புள்ளியாக இருக்கும்’ என்றார்.
    Next Story
    ×