search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஜாதி பிரச்சனையை பேசுகிறதா கடைக்குட்டி சிங்கம்
    X

    ஜாதி பிரச்சனையை பேசுகிறதா கடைக்குட்டி சிங்கம்

    பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் ஜாதி பிரச்சனையை பேசும் படமாக உருவாகி இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. #KadaikuttySingam #Karthi
    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்` கடைக்குட்டி சிங்கம்'. பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஸ்ரீமன், சௌந்தரராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

    முழுக்க முழுக்க கிராமத்திலேயே படமாக்கப்பட்டுள்ள இந்த படம் விவசாயம் மற்றும் சொந்த பந்தங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் படமாக உருவாகி இருக்கிறது. டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது. இந்த டிரைலரை படத்தின் தயாரிப்பாளரும், கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யா வெளியிட்டார்.

    இந்த டிரைலரில், விவசாயத்தைப் பற்றியும், பிரிந்து கிடக்கும் குடும்பத்தை சேர்த்து வைப்பது பற்றியும் உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதில் கார்த்தி பேசும், ‘ஜாதி வைத்து கட்சி நடத்துகிறவன், ஜாதியை வைத்து வியாபாரம் பண்றவன். ஜாதி ஒழியணும் என்று சொல்லி அதை வளர்த்து விடுறவன்’ என்று கோபமாக பேசுகிறார். ஆகையால் ஜாதி பிரச்சனையை பேசும் படமாக உருவாகி இருக்கும் என்று எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #KadaikuttySingam #Karthi #Sayyeshaa

    கடைக்குட்டி டிரைலர்...

    Next Story
    ×