என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விஜய், ஏ.ஆர்.ரகுமானுடன் இரண்டாவது முறையாக இணைந்த பிரபலம்
Byமாலை மலர்21 Jun 2018 1:52 PM GMT (Updated: 21 Jun 2018 1:52 PM GMT)
விஜய்யின் படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், சர்கார் படக்குழுவில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்திருப்பதும் உறுதியாகி உள்ளது. #Sarkar #HBDThalapathyVIJAY
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்யின் 62-வது படத்திற்கு சர்கார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போஸ்டரில் நடிகர் விஜய் வாயில் சிகரெட், கையில் லைட்டர், கண்ணில் கூலிங்கிளாஸ் என மாஸ் லுக்குடன் தோற்றம் அளிக்கிறார். இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்பதும் உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில், படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்திருப்பதும் உறுதியாகி உள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் நிலையில், பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதுகிறார்.
மெர்சல் படத்திற்கு பிறகு விஜய் - ஏ.ஆர்.ரகுமானுடன் விவேக் மீண்டும் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் உள்ளிட்ட அனைத்து பாடல்களின் வரிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சர்கார் படத்திலும் விவேக் ஒப்பந்தமாகி இருப்பது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Proud to be part of the Genius @arrahman Sirs music yet again for our Dear #Thalapathy@actorvijay Sir
— Vivek Lyricist (@Lyricist_Vivek) June 21, 2018
I m thrilled to b working wit the "The Delightful Duo" ..Its a dream to work with the socially conscious @ARMurugadoss sir..Now a reality
Big Tnx to @sunpictures n team #Sarkarpic.twitter.com/4WWHcjmDpt
போஸ்டர் ரிலீசுக்கு பிறகு விவேக்கும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து விவேக் கூறியிருப்பதாவது,
`தளபதி விஜய்க்காக இசை மேதாவி ஏ.ஆர்.ரகுமானுடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. மீண்டும் இவர்கள் இரண்டு பேருடன் இணைவது பெருமிதம். பொதுநலத்தை மனதில் வைத்து படம் எடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுடன் இணைய வேண்டுமென்ற கனவும் நிறைவேறிவிட்டது. சர்கார் படக்குழுவுக்கு நன்றி' என்று குறிப்பிட்டிருக்கிறார். #Sarkar #HBDThalapathyVIJAY #Vijay62
Vivek Lyricist SARKAR HBDVijay Thalapathy Birthday Vijay Birthday Thalapathy 62 Vijay 62 Kodaari Varalakshmi Sarathkumar Keerthy Suresh AR Rahman Yogi Babu Vijay thalapathy 62 Vijay 62 AR Murugadoss Sun pictures thalapathy 62 kalanidhi maran girish gangatharan விஜய் விஜய் 62 ஏ.ஆர்.முருகதாஸ் சன் பிக்சர்ஸ் தளபதி 62 கலாநிதி மாறன் கிரீஸ் கங்காதரன் ஏ.ஆர்.ரஹ்மான் யோகி பாபு ஸ்ரீகர் பிரசாத் கீர்த்தி சுரேஷ் வரலட்சுமி கோடாரி விஜய் நடிகர் விஜய் விஜய் பிறந்தநாள் தளபதி 62 விஜய் 62 தளபதி பிறந்தநாள் சர்கார் பாடலாசிரியர் விவேக்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X