என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தமிழ்படம் 2.0 - படத்தின் தலைப்பை மாற்றிய படக்குழு
Byமாலை மலர்21 Jun 2018 7:58 AM GMT (Updated: 21 Jun 2018 7:58 AM GMT)
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் தமிழ்ப்படம் 2.0 படத்தின் தலைப்பை படக்குழு மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. #TP2Point0 #TamizhPadam2
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா - ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்படம் 2.0' படத்தின் தலைப்பை `தமிழ்படம் 2' என மாற்றிவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
`ஜுரோவிற்கு மதிப்பில்லை என்பதால், தலைப்பில் இருந்து ஜுரோவை மட்டும் நீக்குகிறோம். எனவே படத்தின் தலைப்பு இனிமேல் தமிழ்ப்படம் 2 என்றே அழைக்கப்படும்' இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Tamizh Padam 2 pic.twitter.com/zcEUtduxwI
— Y Not Studios (@StudiosYNot) June 21, 2018
சமீபத்தில் வெளியாகிய படத்தின் டீசர் மற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சினிமா மற்றும் சினிமா அல்லாது நடக்கும் அட்ராசிட்டிகளையும் படக்குழு அவ்வப்போது கலாய்த்து புகைப்படங்களை வெளியிடுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
சமீபத்தில் படத் தயாரிப்பாளர் சசிகாந்த், தலையில் கைவைத்தபடி குணிந்து உட்கார்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்ட இயக்குநர் அமுதன், தமிழ்ப்படம் 2 படம் பார்த்த தயாரிப்பாளரின் மனநிலை இது என்றும் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் படம் வருகிற ஆகஸ்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TP2Point0 #TamizhPadam2
TP2PointO TamizhPadam2 Tamizh Padam 2 Tamizh Padam Spoof film Mirchi Siva Siva Irandavathu Padam CS Amuthan Sasikanth Y not Studios ishwarya menon disha pandey Sathish Santhana Bharathi Manobala தமிழ்படம் 2.0 தமிழ்படம் கலாய்க்க கிண்டல் மிர்ச்சி சிவா சிவா இரண்டாவது படம் சி.எஸ்.அமுதன் சசிகாந்த் ஒய் நாட் ஸ்டூடியோஸ் திஷா பாண்டே ஐஸ்வர்யா மேனன் சதீஷ் மனோபாலா
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X