search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அடுத்தடுத்த படங்களிலும் கிராமத்து பெண்ணாகவே நடிக்கும் அர்த்தனா
    X

    அடுத்தடுத்த படங்களிலும் கிராமத்து பெண்ணாகவே நடிக்கும் அர்த்தனா

    வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `செம' படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அர்த்தனா அவரது அடுத்தடுத்த படங்களிலும் கிராமத்து பின்னணியில் வருகிறார். #Sema #Arthana
    ஜி.வி.பிரகாஷ் - அர்த்தனா நடிப்பில் உருவாகி வருகிற மே 25-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் படம் `செம'. வள்ளிகாந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    தொண்டன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முக்கி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அர்த்தனா இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். படம் பற்றி அர்த்தனா பேசும் போது,



    வள்ளிகாந்த் கதை சொன்ன விதமும், என்னுடைய மகிழினி கதாபாத்திரத்தை அவர் உருவாக்கியிருந்ததும் என்னை மிகவும் கவர்ந்தது. தென் தமிழக பின்னணியில், ஒரு பக்கத்து வீட்டு பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மகிழினி பெயருக்கேற்றார் போல உண்மையானவள், நம் வாழ்வில் எங்கேயாவது அவளை போன்ற ஒருவரை கடந்து வந்திருப்போம். அந்த கதாபாத்திரத்தில் என்னை பொருத்திக் கொள்ள உதவியாக இருந்த இயக்குனர் வள்ளிகாந்துக்கு நன்றி".



    அர்த்தனாவின் அடுத்த இரண்டு படங்களும் கூட கிராமத்து பின்னணியில் உருவாகும் படங்கள் தான். அவை கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், விக்ராந்த்தின் வெண்ணிலா கபடி குழு. "இந்த இரண்டு படங்களிலுமே கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்ததால், கிராமத்து பெண்கள் போல தாவணி உடை அணிய வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். என்னுடைய திரை வாழ்வை 'செம' தொடங்கி வைத்திருக்கிறது. மே 25-ஆம் தேதி ரிலீஸுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்களோடு அமர்ந்து படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன். என்னுடைய அடுத்தடுத்த படங்களில் நகரத்து பெண் கதாபாத்திரங்களிலும் நடிப்பேன்" என்றார். #Sema #GVPrakashKumar #Arthana

    Next Story
    ×