search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரஜினி மகள் வேடத்துக்கு நடிகையை தேடும் படக்குழுவினர்
    X

    ரஜினி மகள் வேடத்துக்கு நடிகையை தேடும் படக்குழுவினர்

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக நடிப்பதற்கான கதாபாத்திரத்தை படக்குவினர் தேடி வருகிறார்கள்.
    ஒரு பக்கம் அரசியலில் வேகம் எடுத்துக்கொண்டே சினிமாவிலும் நடிக்க இருக்கிறார் ரஜினி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க இருக்கிறது. கபாலி படத்தில் தன்சிகா வேடத்தை போல இந்த படத்திலும் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது.

    ரஜினிக்கு மகளாக நடிக்க அந்த கதாபாத்திரத்துக்கான தேடுதல் வேட்டை நடக்கிறது. இறுதிகட்ட கதாபாத்திர தேர்வு நடைபெறுகிறது. இன்னும் சில நாட்களில் ரஜினியுடன் நடிக்க இருக்கும் நட்சத்திரங்களின் பட்டியல் வந்துவிடும். உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் டேராடூனில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
    Next Story
    ×