search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    காலா படத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு
    X

    காலா படத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு

    பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்திற்கு கர்நாடகா மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்ப இருக்கிறது. #Kaala #Rajini
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காலா. படத்தை ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ் தயாரித்திருக்கிறார். ஜுன் 7 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. இதுவரை வெளியான ரஜினி படங்களை விட காலா படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகம். காரணம் ரஜினி அரசியலில் இறங்கிய பின் வெளியாகும் முதல் படம் என்பது தான். 

    படத்திலும் அரசியல் கருத்துகள் இருப்பதால் இப்போதே பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இந்நிலையில் இப்படம் கர்நாடக மாநிலத்தில் வெளியாகுமா? என்பதில் தான் சிக்கல் நீடிக்கிறது. ரஜினி கர்நாடகத்தை சேர்ந்தவர். ஆனால் தமிழ்நாட்டில் தான் நடிகர் ஆனார். தமிழின் முன்னணி நடிகராக நீடித்து அரசியலில் இறங்கும் அளவுக்கு செல்வாக்கு ஆனார். 

    ரஜினி அரசியலில் இறங்கியபோதே காவிரி பிரச்னையில் ரஜினி எந்த பக்கம் ஆதரிப்பார் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அவரோ சொந்த மாநிலத்தைவிட்டு விட்டு தமிழ்நாட்டை ஆதரித்தார். அண்மையில் நடந்த காவிரி மேலாண்மை வாரியத்திற்கான போராட்டத்திலும் கலந்துகொண்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு கண்டனம் தெரிவித்தார். இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கர்நாடகாவில் உள்ள சில அமைப்புகள் ரஜினி படம் வெளியாகும் தேதிக்காக காத்திருக்கிறார்கள். எனவே கர்நாடகாவில் காலா வெளியாகுமா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

    இப்போதுதான் கர்நாடக தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் புதிய அரசு ஆட்சி அமைக்கும். எனவே காலா வெளியீட்டு நேரத்தில் இரண்டு மாநிலங்களிலுமே காவிரி பிரச்னை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த சூழ்நிலையில் கர்நாடகாவில் காலா வெளியிட கடும் எதிர்ப்பு எழ வாய்ப்புண்டு. 



    பாகுபலி வெளியீட்டு சமயத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார் என்ற காரணத்தால் வெளியிட விடாமல் பிரச்னை செய்தார்கள். பின்னர் சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததால் படம் வெளியானது. அதுபோல ரஜினியும் வருத்தம் கேட்க வேண்டும் என்று கோரிக்கை எழலாம். எது எப்படியோ ஜுன் முதல் வாரத்தில் காலா வெளியீடு பரபரப்பை ஏற்படுத்தும். இப்போதே கர்நாடக கன்னட அமைப்புகளில் சில இதற்கான திட்டமிடலில் இறங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.
    Next Story
    ×