search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தமிழ் சினிமாவை ஆக்கிரமிக்கும் தெலுங்கு ஹீரோக்கள்
    X

    தமிழ் சினிமாவை ஆக்கிரமிக்கும் தெலுங்கு ஹீரோக்கள்

    தெலுங்கு நடிகர்களான ராம் சரண், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் ஆகியோரின் படங்கள் தமிழ் நாட்டில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. #TeluguCinema
    ஒரே மாதத்தில் அடுத்தடுத்து மூன்று தெலுங்கு படங்கள் தென்னிந்திய அளவில் சாதனை வெற்றி பெற்றிருப்பதால் உற்சாகம் அடைந்து இருக்கிறது தெலுங்கு பட உலகம். ராம்சரண் நடிப்பில் ரங்கஸ்தலம், மகேஷ்பாபு நடிப்பில் பாரத் அனே நேனு, அல்லு அர்ஜுன் நடிப்பில் நா பேரு சூர்யா ஆகிய மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாகின. மூன்றுமே தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் என்பதால் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகின. மூன்றுமே பெரிய வெற்றியை ருசித்துள்ளன.

    கோடை விடுமுறையை குறி வைத்து இறக்கப்பட்ட இந்த படங்கள் வசூலில் சாதனை புரிந்துள்ளன. ஆந்திராவில் மட்டுமல்லாது சென்னையிலும் மூன்று படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது தமிழ் நடிகர்களுக்கு கலக்கத்தை வரவழைத் திருக்கும். 
    ரங்கஸ்தலம் படம் சென்னையில் முதல் 3 தினங்களில் 1.01 கோடி வசூலித்தது. அந்த வசூலை தாண்டி 1.15 கோடியை வசூலித்தது பாரத் அனே நேனு. இந்த இரண்டு படங்களையும் தூக்கி சாப்பிட்டு இரண்டே நாட்களில் ஒரு கோடியைத் தொட்டது நா பேரு சூர்யா படம். இந்த ஒரு மாதத்தில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரே வெற்றி ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ மட்டும்தான். இந்த வாரம் வெளியான படங்களில் இரும்புத்திரையும் நடிகையர் திலகமும் வெற்றி பெற்றுள்ளன. 

    தமிழ் சினிமா மார்க்கெட் மீது தெலுங்கு ஹீரோக்களுக்கு எப்போதுமே ஒரு கண் உண்டு. அல்லு அர்ஜுன் நடித்த நா பேரு சூர்யா படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிட்டார்கள். வசூலை பார்த்தது. மகேஷ்பாபுவின் பாரத் அனே நேனு படத்தை ரீமேக் செய்ய விஜய், விஷால், சூர்யா உள்ளிட்ட தமிழின் முன்னணி நடிகர்கள் ஆசைப்பட்டனர். ஆனால் அந்த படத்தை டப்பிங் செய்து தமிழில் வெளியிட சொல்லிவிட்டார் மகேஷ்பாபு. பிரபாஸ், ராணா, நானி, சந்தீப் கி‌ஷன், பவன் கல்யாண், ராம்சரண், நாகசதைன்யா உள்ளிட்ட பெரிய தெலுங்கு ஹீரோக்களும் தமிழில் படம் நடிக்க ஆசைப்படுகிறார்கள். சிலர் தாங்கள் நடிக்கும் தெலுங்கு படத்தை தமிழிலும் சேர்த்தே எடுக்க நிர்ப்பந்திக்கிறார்கள்.
    Next Story
    ×