என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அஜித் படத்தில் செஞ்சூரி அடிக்கும் யோகி பாபு
Byமாலை மலர்1 May 2018 10:13 AM GMT (Updated: 1 May 2018 10:13 AM GMT)
பல படங்களில் காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் செஞ்சூரி அடிக்க இருக்கிறார். #YogiBabu
‘யோகி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாபு. சுப்ரமணியம் சிவா இயக்கிய இப்படம் சிறந்த அறிமுகமாக அமைந்ததால், இப்படத்திற்கு பின்னர் தன் பெயரை யோகி பாபுவாக மாற்றிக் கொண்டார்.
அதன் பின்னர் வந்த ‘கலகலப்பு’, ‘பட்டத்து யானை’, ‘மான் கராத்தே’, ‘யாமிருக்க பயமேன்’, ‘ரெமோ’ உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. யோகி பாபு ஒரு காட்சியில் இருந்தால் போதும் என்று பல இயக்குனர்கள் அவரை அணுகி வருகிறார்கள்.
மேலும் எல்லா இயக்குனர்களுக்கும் தேவையான காமெடி நடிகராக உயர்ந்துள்ளார். தற்போது விஜய்யுடன் ‘தளபதி 62’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இப்படம் யோகி பாபுக்கு 100வது படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதையறிந்த ரசிகர்கள் பலரும் யோகி பாபுவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Next Story
×