search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பிரபாஸ், சத்யராஜை தொடர்ந்து மகேஷ் பாபுவுக்கு கிடைத்த கவுரவம்
    X

    பிரபாஸ், சத்யராஜை தொடர்ந்து மகேஷ் பாபுவுக்கு கிடைத்த கவுரவம்

    பிரபாஸ் மற்றும் சத்யராஜை தொடர்ந்து தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவும் மேடம் துஸ்ஸாத் மியூசித்தால் கவுரவிக்கப்பட்டுள்ளார். #MaheshBabu #MadameTussauds
    உலகின் பிரபல மியூசியமான மேடம் துஸ்ஸாத்தில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் மகேஷ் பாபுவின் மெழுகு சிலை இடம்பெற இருக்கிறது. அதற்கான அளவுகள் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மகேஷ் பாபு அவரது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.

    அதில், மதிப்புமிக்க மேடம் துஸ்ஸாத்தில் இடம்பெறுவதில் மகிழ்ச்சி. கலைஞர்கள் குழுவிற்கு நன்றி, நம்பமுடியவில்லை. என்று குறிப்பிட்டிருக்கிறார். 

    மகேஷ் பாபு நடிப்பில் `பாரத் அனே நேனு' படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், மகேஷ் பாபுவுக்கு இந்த அரிய கவுரவம் கிடைத்தள்ளது. 



    இதற்கு முன்பாக `பாகுபலி' படத்தில் நடித்த பிரபாஸ், சத்யராஜ் மேடம் துஸ்ஸாத்தால் கவுரவப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #MaheshBabu #MadameTussauds

    Next Story
    ×