search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பாலியல் வன்முறைக்கு எதிராக உருவாகும் திரைத்துறை பெண்கள் பாதுகாப்பு அமைப்பு
    X

    பாலியல் வன்முறைக்கு எதிராக உருவாகும் திரைத்துறை பெண்கள் பாதுகாப்பு அமைப்பு

    பாலியல் வன்முறைக்கு எதிராக திரைத்துறை பெண்கள் பாதுகாப்பு அமைப்பு வருகிற மே 1-ந்தேதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #WomenSafety
    சினிமா துறையில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை பல்வேறு நடிகைகளும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், சினிமா துறையை சேர்ந்த பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தென் இந்திய திரைத்துறை பெண்கள் மையம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்படுகிறது. இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள் வருமாறு:-

    * திரைத்துறையில் ஆண் - பெண் சமத்துவம் வேண்டும்.

    * பெண்களை பாலியல் சின்னமாக பயன்படுத்துவதை எதிர்ப்பது.

    * பாலியல் ரீதியான சுரண்டல்களை தடுப்பது.

    * திரை உலக பெண்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக பாடுபடுவது.

    * மக்களுக்கான படைப்புகளை ஊக்கப்படுத்துவது.

    இந்த நோக்கங்களுக்காக தொடங்கப்படும் தென் இந்திய திரைத்துறை பெண்கள் மைய தலைவராக வைசாலி சுப்பிரமணியம் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். மற்ற நிர்வாகிகளின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.



    இதன் தொடக்க விழா வருகிற மே மாதம் 1-ந்தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் இயக்குனர் விக்ரமன், ஒளிப்பதிவாளர் சங்க தலைவர் பி.சி.ஸ்ரீராம், வெற்றிமாறன், நடிகர் சத்ய ராஜ், நடிகைகள் ரோகிணி, ரேவதி, சச்சு, புஷ்கர் காயத்ரி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இது தமிழ் திரைப்படத்தின் 100 வருட வரலாற்றில் இதுஒரு முக்கிய அமைப்பு. அடுத்த தலைமுறையின் பாதுகாப்புக்கான அடித்தளம் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×