search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மாரி-2 படத்தின் புதிய அப்டேட்
    X

    மாரி-2 படத்தின் புதிய அப்டேட்

    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘மாரி 2’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. #Maari2, #Dhanush
    பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ்-சாய் பல்லவி ஜோடியாக சேர்ந்து நடிக்கும் படம் ‘மாரி-2’. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

    வேகமாக வளர்ந்து வந்த இதன் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.

    இதில், முதன் முறையாக தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மலையாளம், தெலுங்கில் இவர் நடித்த படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன. சாய் பல்லவியின் யதார்த்த நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவரது நடிப்பில் ‘தியா’ படம் தமிழில் வரவுள்ளது. இந்த நிலையில், தனுசுடன் இவர் ஜோடி சேர்ந்திருப்பது ‘மாரி-2’ படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தவிர, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுசுடன் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் நிச்சயம் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×