
சில தலைவர்கள் மறைத்த பிறகும் எதனை ஆண்டுகள், எத்தனை காலங்கள் ஆனாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள். அப்படி மறைந்த பிறகும் மக்கள் மனதில் எப்போதும் குடிகொண்டிருக்கும் ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். இவரை பற்றிய பல அறிய தகவல்களை இவர் ஆட்சியில் இருந்த போது ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த கற்பூர சுந்தரபாண்டியன் ‘நான் கண்ட எம்.ஜி.ஆர்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சூர்யா, கார்த்தி, லதா, அம்பிகா, மயில்சாமி போன்ற மூத்த நடிகர்கள் மற்றும் வி.ஜி.சந்தோசம், ஏ.சி.சண்முகம் இதயக்கனி எஸ்.விஜயன், வள்ளி நாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இப்புத்தகத்தின் முதல் பிரதியை வி.ஜி.சந்தோசம் வெளியிட ஏ.சி.சண்முகம் பெற்று கொண்டார்.