
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் - மஹிமா நம்பியார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `குற்றம் 23'. மெடிக்கல் கிரைம் - திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் முதல்முறையாக போலீசாக நடித்திருப்பார்.
விஜயகுமார், வம்சி கிருஷ்ணா, தம்பி ராமையா, அரவிந்த் ஆகாஷ், அபிநயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை ரெதான் - தி சினிமா பீப்பல் நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிரைம் 23 என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகும் இந்த படத்தின் டிரைலரை, நடிகர் பிரபாஸ் இன்று மாலை 5.30 மணியளவில் வெளியிட இருப்பதாக நடிகர் அருண் விஜய் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் `சாஹோ' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Crime23 #ArunVijay #Prabhas