search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    துல்கர் சல்மான் வழியை பின் பற்றும் சமந்தா
    X

    துல்கர் சல்மான் வழியை பின் பற்றும் சமந்தா

    தமிழ், மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள நடிகர் துல்கர் சல்மானின் வழியை பின்பற்றுகிறார் நடிகை சமந்தா. #Samantha
    சமந்தா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் தெலுங்கு படம் ‘ரங்கஸ்தலம்’. இதில் ராம்சரண் தேஜா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி வருகிறது. இப்படம் ஆந்திரா- தெலுங்கானாவிலும் சேர்த்து மொத்தம் ரூ.50 கோடி வசூலை குவித்து இருக்கிறது.

    தற்போது மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் தயாராகி உள்ளது. சாவித்ரியாக கீர்த்திசுரேஷ், ஜெமினி கணேசனாக துல்கர்சல்மான் நடித்துள்ள இதில், சமந்தா நிருபர் வேடத்தில் நடித்திருக்கிறார். 



    துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு இரண்டிலும் சொந்த குரலில் டப்பிங் பேசி இருக்கிறார். அடுத்து சமந்தா இரண்டு மொழிகளிலும் சொந்த குரலில் டப்பிங் பேசுகிறார்.

    மேலும் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ள ‘இரும்புத்திரை’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
    Next Story
    ×