காவிரி பிரச்சினை பற்றி நடிகர் விவேக் கவிதை ஒன்றை எழுதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தமிழனும், காவிரித் தாயும் உரையாடுவதுபோல் வரிகள் இடம் பெற்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
நான்:- காவிரித் தாயே. கருணைத் தாயே. கன்னட மண்ணில் பூ விரித்தாயே. ஏன், தமிழ்மகன் கேட்டால் கை விரித்தாயே?.
காவிரி:- முத்து மகனே. முட்டாள் மகனே. கைவிட்டது நானா நீயா?. செழித்துப் பாய்ந்தேன்; நீ சேமித்தாயா?. ஆழியில் (கடலில்) கலக்குமுன் அணை செய்தாயா?.
நான்:- இனி நான் என்ன செய்ய?, சொல்வாயா?.
காவிரி:- சினிமா பார்த்து சிரி. கிரிக்கெட், பாப்கார்ன் கொரி. மழுங்கிப்போனதே உன் வெறி.
நான்:- தாயே என்னை மன்னிப்பாயா?.

காவிரி:- எழுந்து நில். தயக்கம் கொல். இரைப்பை நிரப்புவது கலப்பை. இதை உணராதவன் வெறும் தோல் பை. நான் உனக்கும் அன்னை. கன்னடர் உந்தன் உடன் பிறப்பு. காவிரியும் உனது நீர்ப்பரப்பு. இதை உரக்கச் சொல். உரிமை வெல்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #CauveryManagementIssue #Vivekh