search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மெர்குரிக்கு துணை நின்ற நான்கு பேர்
    X

    மெர்குரிக்கு துணை நின்ற நான்கு பேர்

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்குரி’ படத்தின் டிரைலருக்கு நான்கு பேர் துணை நின்றிருக்கிறார்கள். #Mercury
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் `மெர்குரி'. இதில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், இந்துஜா, அனிஷ் பத்மன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    வசனங்களே இல்லாத இந்த படம், ஒரு சைலண்ட் திரில்லராக உருவாகி இருக்கிறது. பின்னணி இசையின் மூலமே நகரும் இந்த படத்தில் பிரபுதேவா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

    கடந்த 5ம் தேதியே இப்படத்தின் டிரைலர் வெளியாக இருந்தது. அன்றைய தினத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலை மூடவும் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால், டிரைலர் வெளியிட்டை தள்ளி வைத்தார். தற்போது இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது.



    இந்த டிரைலரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர்கள் துல்கர் சல்மான், நித்தின், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது. 

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்தி வரும் ஸ்டிரைக் காரணமாக தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் இப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Mercury #PrabhuDeva
    Next Story
    ×