search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஸ்ரீதேவி வாழ்க்கை படத்தில் வித்யாபாலன்?
    X

    ஸ்ரீதேவி வாழ்க்கை படத்தில் வித்யாபாலன்?

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகை வித்யா பாலன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #SriDevi
    இந்திய சினிமாவில் முத்திரை பதித்தவர் ஸ்ரீதேவி. அவருடைய திடீர் இழப்பு திரை உலகினரிடம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து அவருடைய கணவர் போனிகபூர் ஆவண படம் எடுக்க இருக்கிறார்.

    இந்த நிலையில், இந்தி பட இயக்குனர் ஹன்சல் மேத்தா ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்தில் ஸ்ரீதேவி வேடத்தில் வித்யாபாலனை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்.

    சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில், சில்க் சுமிதா வேடத்தில் நடித்து பாராட்டு பெற்றவர் வித்யாபாலன். இப்போது ஸ்ரீதேவியாக நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது. விரைவில் இந்த படத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.



    இது பற்றி கூறிய இயக்குனர் ஹன்சல் மேத்தா...

    “என் படத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க நினைத்த போது அவர் இறந்து விட்டார். இன்னொரு ஸ்ரீதேவி இல்லவே இல்லை. இனி ஸ்ரீதேவி பற்றி எடுக்கும் படத்தை அவருக்கு சமர்ப்பணம் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×