search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விக்ரம் மகனின் தோற்றத்தை மாற்றிய பாலா
    X

    விக்ரம் மகனின் தோற்றத்தை மாற்றிய பாலா

    பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வரும் ‘வர்மா’ படத்தில் அவருடைய தோற்றத்தை மாற்றி இருக்கிறார்.
    தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் தயாராகிறது. இதில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை பாலா இயக்குகிறார்.

    ‘வர்மா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2-ந்தேதி நேபாளத்தில் தொடங்கியது. மகனின் முதல் படப்பிடிப்பை காண்பதற்காக விக்ரமும் படக்குழுவினருடன் நேபாளம் சென்று இருக்கிறார். அங்கு அவர் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

    தனது படத்தில் நடிக்கும் நாயகர்களுக்கு தனி அடையாளம் கொடுப்பது இயக்குனர் பாலாவின் வழக்கம். அதுபோல் இந்த படத்தில் நடிக்கும் துருவ்வும் பாலா விருப்பப்படி ‘தாடி மீசையுடன் அடையாளமே தெரியாமல் மாறி இருக்கிறார். இந்த புகைப்படத்தையும் விக்ரம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் வேகமாக பரவி வருகிறது.



    ‘வர்மா’ படப்பிடிப்பு நேபாளத்தின் தலைநகர் காட்மண்டு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்து வருகிறது. பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிப்பதால் ‘வர்மா’ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    Next Story
    ×