search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு - எச்.ராஜா பதிவுக்கு கமல்ஹாசன் கண்டனம்
    X

    வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு - எச்.ராஜா பதிவுக்கு கமல்ஹாசன் கண்டனம்

    தமிழகத்தில் இருக்கும் பெரியார் சிலை ஒருநாள் அகற்றப்படும் என்ற எச்.ராஜாவின் கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். #KamalHaasan #PeriyarStatue #HRaja
    திரிபுரா மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முந்தைய ஆட்சியாளர்கள் வைத்த  லெனின் சிலை அதிரடியாக அகற்றப்பட்டது. 

    இதுபற்றி தமிழக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா அவரது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தினை பதிவு செய்திருந்தார். அதில், ‘லெனின் யார், அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈவேரா ராமசாமி சிலை’ என பதிவிட்டிருந்தார்.

    எச்.ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது. வன்முறைக்கும், மோதலுக்கும் வழிவகுக்கும் எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன், சீமான், கே.பாலகிருஷ்ணன், ஜவாகிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர். 



    இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து நடிகர் கமல்ஹாசன் அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 

    `அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம். எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம்.வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு' என்று குறிப்பிட்டிருக்கிறார். 

    கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, எச்.ராஜா தனது பேஸ்புக் பதிவை நீக்கிவிட்டார். #KamalHaasan #PeriyarStatue #HRaja
    Next Story
    ×