search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பாடல் காட்சியை நீக்க மாட்டோம் - நடன இயக்குனர் பேட்டி
    X

    பாடல் காட்சியை நீக்க மாட்டோம் - நடன இயக்குனர் பேட்டி

    இணைய தளத்தில் பல லட்சம் ‘லைக்’குகளை பெற்றுள்ள ‘கண் சிமிட்டும்’ பாடல் காட்சியை நீக்க மாட்டோம் என மாணிக்க மலராய பூவி பாடலின் நடன இயக்குனர் தெரிவித்துள்ளார். #PriyaVarrier #OruAdaarLove
    மலையாளத்தில் ஜிமிக்கி கம்மல் என்ற பாடலை கல்லூரி ஆசிரியை ஷெரிலும், அவரது மாணவிகளும் சேர்ந்து ஆடிய காட்சிகள் யூடியூப்பில் வெளியாகி புகழின் உச்சத்தை எட்டியது.

    இந்த பரபரப்பு அடங்கி சில மாதங்களே ஆன நிலையில் இப்போது ஒரு அடார் லவ் என்ற படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது.

    இந்த காட்சியில் மலையாளத்தில் மூன்றே மூன்று குறும் படங்களில் தலைகாட்டிய பிரியா வாரியர் நடித்திருந்தார். முதல் டீசர் 30 வினாடிகள் மட்டுமே ஓடியது. இதில் பிரியா வாரியர், நாயகன் ரோ‌ஷனை பார்த்து கண் அசைப்பதும், புருவங்களை உயர்த்துவதும், பின்னர் காதல் ரசம் ததும்ப சிரிப்பதும் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

    நாயகி பிரியா வாரியரின் அழகு முகம், அதில் ததும்பிய காதல் ரசம் இவை அனைத்தையும் தூக்கி சாப்பிடும் வகையில் அவர், புருவம் அசைத்து, கண்ணடித்த காட்சி, தலை நரைத்த வயதுடையோரையும் திரும்ப திரும்ப பார்க்க வைத்தது.



    இதனால் ஒரே நாள் இரவில் பல லட்சம் லைக்குகளை அள்ளிக்குவித்தது. இது ஒரு அடார் காதல் படத்தை தயாரித்தவர்களுக்கும், இயக்குனர் ஒமர் லுலுவுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. எனவே மறுநாள் அவர்கள் படத்தின் பாடல் வரிகளை முழுமையாக வெளியிட்டனர்.

    மாணிக்க மலராய பூவே... என்று தொடங்கும் இப்பாடல் காதலியை, காதலன் பல்வேறு கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு பாடுவார். 3 நிமிடம் ஓடும் இந்த பாடல் காட்சியிலும் பிரியா வாரியரின் முகபாவனைகள் அனைவரையும் கவரும் வகையில்இடம் பெற்றிருந்தது.

    அவர், இருவிரல்களை உதட்டில் தடவி அந்த விரல்களை துப்பாக்கி போல் காதலனை நோக்கி சுட்டிக்காட்டும் காட்சி பலரது இதயத்தையும் நொறுக்கி விட்டது. இதற்கும் லைக்குகள் குவிந்தன. இதை அறிந்து மகிழ்ச்சியில் திளைத்த படக்குழுவினருக்கு ஐதராபாத்தைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பினர் அதிர்ச்சியை கொடுத்தனர்.

    அங்குள்ள பலக்னுமா போலீஸ் நிலையத்தில் 57 பேர் கையெழுத்திட்டு புகார் கொடுத்தனர். அதில், மாணிக்க மலராய பூவே பாடலின் வரிகள் மத உணர்வை புண்படுத்துவதாக உள்ளது என்றும், அதில் நடித்தவர்கள் மத தலைவர்களை இழிவுப்படுத்தி விட்டதாகவும் கூறி இருந்தனர். இதனால் குற்றம் சாட்டப்பட்ட காட்சிகளை படத்தில் இருந்து அகற்றி விடலாமா? என்று படக்குழுவினர் யோசித்தனர்.

    மேலும் இணையத்தில் வெளியான காட்சிகளை நீக்கிவிடலாம் எனவும் திட்டமிட்டனர். ஆனால் காட்சிகளை நீக்க வேண்டாம், பாடலில் எந்த குறையும் இல்லை. காட்சிகளை நீக்கினால் படம்தான் பாதிக்கும் என்று பலரும் படக் குழுவினரிடம் கூறினர்.

    காட்சிகளை அகற்றக் கூடாது என திரையுலக பிரமுகர்கள் பலரும் ஆதரவு குரல் கொடுத்தது படக்குழுவினருக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. தன்னார்வ அமைப்பு ஒன்று ஒரு அடார் படக்குழுவிற்கு பகிரங்க ஆதரவு தெரிவித்தது. ‘பத்மாவத்’ படம் வெளியானபோதும் இது போன்ற எதிர்ப்புகள் கிளம்பியது.

    கருத்து யாரையும் புண்படுத்தாதபோது அதில் நடித்தவர்கள் மீதும் குற்றம் சாட்டுவது தவறு. அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவதையும் ஏற்க முடியாது. சினிமாவை கலையாக பார்க்க வேண்டுமே தவிர, குற்றம் சாட்டக்கூடாது என்று கருத்து தெரிவித்தனர்.



    இவற்றிற்கு பிறகு ஒரு அடார் காதல் படத்தில் இடம் பெற்ற மாணிக்க மலராய பூவே நடனத்தை இயக்கிய ஷான் ரகுமான் நேற்று மாலை நிருபர்களிடம் கூறும்போது, எதிர்ப்புக்காக பாடல் காட்சியை நீக்க மாட்டோம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்றார்.

    இந்த பேட்டியின்போது, இசை அமைப்பாளர் அவுசேப்பச்சன் உடன் இருந்தார்.

    இவர்கள் பேட்டி அளித்த சில மணி நேரத்தில் படத்தின் இயக்குனர் உமர்லுலுவும் நிருபர்களை சந்தித்தார். அவர், பிரியாவாரியர் இடம் பெற்ற பாடல் காட்சி படத்தில் இடம் பெறும். அதை நீக்கப்போவதில்லை என்று கூறினார்.

    பாடல் தொடர்பான புகார் நிரூபிக்கப்பட்டால் 4 ஆண்டு ஜெயில் தண்டனை, அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இது பற்றி உதவி போலீஸ் கமி‌ஷனர் சையது பைசல் கூறும் போது, இப்படி ஒரு புகார் வந்துள்ளது பற்றி வழக்குபதிவு செய்துள்ளோம். கேரளாவுக்கு போலீஸ் படையை அனுப்பி சமந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவோம் என்றார்.

    புகாரில் கூறப்பட்டுள்ள டைரக்டர் கேரளாவைச் சேர்ந்த என்பதால் ஐதராபாத் போலீசார் கேரளா சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். டைரக்டர் மீது மட்டும் புகார் கூறப்பட்டிருந்தாலும் அந்த காட்சியில் நடித்தவர்கள், இசை அமைப்பாளர், தயாரிப்பாளருக்கும் பிரச்சினை உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. #PriyaVarrier #OruAdaarLove
    Next Story
    ×