search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதை விரும்பாத அஜித்
    X

    பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதை விரும்பாத அஜித்

    நடிகர் சங்க கட்டிடத்துக்கு பொது மக்களிடமிருந்து பணம் வசூலிப்பதை நடிகர் அஜித் விரும்பவில்லை என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
    நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக, கடந்த சனிக்கிழமை மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ‘நட்சத்திரக் கலைவிழா 2018’ நடைபெற்றது. இந்த விழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நடிகர் – நடிகைககள் கலந்து கொண்டனர். 

    நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக, சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் இரண்டரை கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், லைகா மொபைல் உள்ளிட்ட சில நிறுவனங்களும் நிதியுதவி அளித்தன.

    நட்சத்திர கலைவிழாவை முடித்து, நடிகர்கள் சென்னை திரும்பியுள்ள சூழலில், நடிகர் சங்கத்தின் டிரஸ்டி பதவியிலிருந்து எஸ்.வி.சேகர் ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கான காரணத்தை விளக்கி தலைவர் நாசருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த எஸ்.வி.சேகர் கூறுகையில், ''நடிகர் சங்க கட்டிடத்துக்கு மக்களிடமிருந்து பணம் வசூலிப்பதை அஜித் விரும்பவில்லை. மலேசிய நட்சத்திரக் கலைவிழாவில் பங்கேற்க வேண்டும் என்று நடிகர் சங்கம் சார்பில் அஜித்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அஜித் அதை விரும்பவில்லை.

    மக்கள், படம் பார்ப்பதற்காக தியேட்டரில் டிக்கெட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். அதன் மூலம்தான் நாம் சம்பாதிக்கிறோம். அதனால் நடிகர் சங்க கட்டிடத்துக்கு நடிகர்களாகிய நாமே நிதி அளிக்கலாம். அதைத் தவிர்த்து ஏன் நட்சத்திரக் கலைவிழா நடத்தி மக்களிடம் பணம் வசூலிக்க வேண்டும் என்று அஜித் கேட்டார்'' என்று எஸ்.வி.சேகர் தெரிவித்திருக்கிறார்.
    Next Story
    ×