search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அன்னக்கிளி படத்துக்கு  இசை அமைப்பாளர் ஆனார் இளையராஜா
    X

    அன்னக்கிளி படத்துக்கு இசை அமைப்பாளர் ஆனார் இளையராஜா

    பஞ்சு அருணாசலம்"நான் படம் எடுத்தால், நீதான் மிïசிக் டைரக்டர்'' என்று இளையராஜாவுக்கு வாக்குறுதி அளித்தார், பஞ்சு அருணாசலம்.
    பஞ்சு அருணாசலம்"நான் படம் எடுத்தால், நீதான் மிïசிக் டைரக்டர்'' என்று இளையராஜாவுக்கு வாக்குறுதி அளித்தார், பஞ்சு அருணாசலம். அதன்படி "அன்னக்கிளி'' படத்தின் இசை அமைப்பாளர் வாய்ப்பை வழங்கி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார்.

    கன்னடத்தில் நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருந்தவர் ஜி.கே.வெங்கடேஷ். அவரிடம் இளையராஜா 1969-ம் ஆண்டு உதவி இசையமைப்பாளராக சேர்ந்தார். 150 படங்கள் வரை அவருடன் இணைந்து பணியாற்றினார்.

    இளையராஜா ஆர்மோனியத்தை வாசிப்பதைத்தான் அனைவரும் பார்த்திருப்பார்கள். ஆனால் அவர் ஜி.கே.வெங்கடேசிடம் பணியாற்றும் போது, கிட்டார், பியானோ, கம்போஆர்கன் ஆகிய இசைக்கருவிகளையும் வாசித்தார். அத்தோடு பாடல்களை எப்படி பாட வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பது, பின்னணி பாடகர்கள் பாடும்போது தவறுகள் ஏற்படும்போது, அதை சரிசெய்வது போன்ற பணிகளையும் செய்தார்.

    இந்த சமயத்தில், இளையராஜா வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்பட்டது.

    இளையராஜாவின் நண்பரும், பிற்காலத்தில் பிரபல கதாசிரியராக உயர்ந்தவருமான ஆர்.செல்வராஜ் உருவத்தில் அதிர்ஷ்டம் அவரைத் தேடி  வந்தது.இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "செல்வராஜ் ஒருநாள் வந்து, `டேய்! உனக்காக பஞ்சு அருணாசலத்துக்கிட்டே சொல்லியிருக்கிறேன். அவர் உன்னை பார்க்க வேண்டும் என்று அழைத்துவரச்சொன்னார்' என்று கூறினான். பின்னர் நானும், செல்வராஜ×ம் ஒருநாள் அவரைப்பார்க்க சென்றோம்.

    காலை 10 மணி இருக்கும். ஒரு சிறிய அறையில் பனியன் மட்டும் போட்டுக்கொண்டு எழுதிக்கொண்டிருந்தார். எங்களைப்பார்த்தவுடன் எழுதுவதை நிறுத்திக்கொண்டு, `வா..செல்வராஜ்' என்றார். உடனே செல்வராஜ், `இவர்தான் ராஜா!' என்று என்னை அறிமுகம் செய்து

    வைத்தான்.அதன்பின்னர் பஞ்சு அருணாசலம், `நீ ஏதாவது படத்திற்கு டிïன் போட்டு இருக்கிறாயா?, இருந்தால் கொஞ்சம் பாடிக்காட்டு, கேட்கலாம்' என்றார்.

    உடனே நான், ஏற்கனவே மெட்டமைத்து வைத்திருந்த "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'', "மச்சானைப்பார்த்தீங்களா'', "சுத்தச்சம்பா'' போன்ற பாடல்களைப் பாடிக்காட்டினேன். பாட்டுக்கு ஏற்ற தாளமாக பக்கத்தில் இருந்த டேபிளையும் லேசாக தட்டினேன்.

    அவர் அந்தபாடல்களை ரசித்துக்கேட்டு விட்டு, `டிïன் எல்லாம் நன்றாகவே இருக்கிறது. இப்போது நான் எழுதுகின்ற படம் அனைத்தும் காமெடி படம்தான். ஏற்கனவே நான் எழுதி அதிக படங்கள் பாதியில் நின்று போனதால் எனக்கு `பாதிப்படம் பஞ்சு அருணாச்சலம்' என்று பேர் வைத்திருக்கிறது, திரைஉலகம்! இந்த நல்ல டிïன்களை காமெடிப் படத்தில் போட்டால், அதற்குரிய மரியாதை போய்விடும். நல்ல கதை அமைந்து அதில் இந்த பாடல்களுக்கு முக்கியத்துவம் வருகிற மாதிரி வந்தால்தான் படமும், இசையும் நன்றாக இருக்கும். அது போல எடுக்க வேண்டும் என்றால் இப்போது இருக்கின்ற நிலையில் எந்த புரோடிïசர் வரப்போகிறார்! ஒரு வேளை நானே தயாரிப்பாளராக வந்தால், உனக்கு கண்டிப்பாக சான்ஸ் தருகிறேன். அதுவரைக்கும் நீ பொறுத்து இருக்கணும்!' என்றார்.

    "சரி சார்'' என்று அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வந்தோம்.

    பஞ்சு சார் சொன்ன பதிலை, சாதாரணமாக எல்லோரும் சொல்கின்ற பதில்போல்தான் எடுத்துக்கொண்டேன். ஜீ.கே.வியின் வேலைகளில் அதைப்பற்றி மறந்தும் விட்டேன்.

    இடையில் செல்வராஜ் ஒருநாள் வந்து `ஏய்.. பஞ்சுசார் கதை - வசனம் எழுதிய "மயங்குகிறாள் ஒரு மாது'' என்ற படம் நல்ல ஹிட்டாகி விட்டது. அடுத்த படம் தொடங்கினால், நீதான் மிïசிக் டைரக்டர்! ரெடியா இருடா' என்றான். நான் அதையும் ஒரு பேச்சாக எடுத்துக் கொண்டேனே தவிர உண்மையாக எடுத்துக்கொள்ளவில்லை.

    சில நாட்களுக்குப்பின் செல்வராஜ் என்னிடம் வந்து, பஞ்சு அருணாசலம் என்னை அழைப்பதாகக் கூறினான். போனேன்.

    "வாய்யா'' என்று வரவேற்ற பஞ்சு சார், "செல்வராஜ் ஒன்றும் சொல்லலியா?'' என்று கேட்டார்.

    `இல்லை' என்கிற மாதிரி தலையசைத்து, செல்வராஜை நோக்கினேன்.

    "இல்லை சார். அதை நீங்களே சொன்னாத்தான் நல்லாயிருக்கும்'' என்று செல்வராஜ் சொன்னான்.

    "செல்வராஜ் சொன்ன ஒரு கதையை நானே சொந்தமாகத் தயாரிக்கப்போறேன், நீதான் மிïசிக்!'' என்றார், பஞ்சு அருணாசலம்.

    மகிழ்ச்சி தாங்காமல், "சரி அண்ணே'' என்றேன்.

    கோவர்த்தனுடன் சேர்ந்து இசையமைக்க ஒத்துக்கொண்டது நினைவுக்கு வந்தது.

    "வரப்பிரசாதம் என்ற ஒரு படத்தை கோவர்த்தன் - ராஜா என்ற பெயரில் இருவரும் சேர்ந்து இசையமைக்கிறோம். அதே பெயரில் இதில் இசையமைத்து விடுகிறோமே'' என்றேன்.

    "இங்கப்பாரு! நான் சான்ஸ் கொடுப்பதே உனக்கு! இதில் ஏன் அவர் பெயரைப்போட வேண்டும்? "கைராசி'', "பட்டணத்தில் பூதம்'' என்று பல படத்திற்கு கோவர்த்தன் தனியாகவே இசையமைத்திருக்கிறார். இது நான் உனக்கு கொடுக்கும் படம்'' என்று பஞ்சு சார் கூறினார்.

    இதை தயங்கி தயங்கி நான் கோவர்த்தனிடம் சொன்னேன். "பரவாயில்லை; சான்ஸ் கிடைப்பது கஷ்டம். உன் பெயரில் செய்'' என்று அனுமதி கொடுத்தார்.

    பஞ்சு சார், தன் தம்பி சுப்புவை தயாரிப்பாளராகப் போட்டு இந்த படத்தை எடுத்தார்.

    செல்வராஜ் ஏற்கனவே சொல்லியிருந்த ஒரு கிராமத்து மருத்துவச்சி கதையை கேட்டு, சில மாற்றங்கள் செய்து, திரைக்கதையையும், வசனத்தையும் பஞ்சு சார் எழுதினார். இதை தேவராஜ் - மோகன் டைரக்ட் செய்தார்கள்.

    பாடல்களை எல்லாம் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதை டைரக்டர் தேவராஜிடம் விளக்கிக்கூறி, ஏற்கனவே கம்போஸ் செய்யப்பட்ட பாடல்களை அவரை கேட்கவைத்தார் பஞ்சு.

    உத்தமபாளையம் பகுதியில் பாடப்படுகின்ற நாட்டுப்பாடல். ஏற்கனவே சிறுவயதிலிருந்து நான் கேட்டு வந்த "புள்ளிபோட்ட ரவிக்கைக்காரி'' என்று தொடங்கும் ஒரிஜினல் பாடலை, நான் வேறுவகையாக மாற்றி அமைத்தேன்.

    அதுதான் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'' என்ற பாடலாகும். அந்த அன்னக்கிளி என்ற பெயரே படத்தின் பெயரானது.

    அடுத்து "மச்சானை பார்த்தீங்களா'' என்ற பாடலை ஏற்கனவே அமர் (கங்கை அமரன்) எழுதி டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் மகன் எஸ்.வி.ரமணன் ஸ்டுடியோவில் பதிவு செய்து வைத்து இருந்தோம். அதை "அன்னக்கிளி'' படத்தில் பயன்படுத்த தீர்மானித்தோம்.

    பூஜை தினத்தன்று இந்த 2 பாடல்களையும் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. பாடல்களை கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதுவார் என்று பஞ்சு சொன்னார்.

    அந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்து இருந்தேன்.

    Next Story
    ×