search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டுகாடி ஹைப்பர்மோட்டார்டு 950 இந்திய வெளியீட்டு விவரம்
    X

    டுகாடி ஹைப்பர்மோட்டார்டு 950 இந்திய வெளியீட்டு விவரம்

    டுகாடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹைப்பர்மோட்டார்டு 950 மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    டுகாடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 ஹைப்பர்மோட்டார்டு 950 மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. 2019 டுகாடி ஹைப்பர்மோட்டார்டு 950 இந்தியாவில் ஜூன் 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் முன்னதாக 2018 EICMA விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    டுகாடி ஹைப்பர்மோட்டார்டு 950: ஸ்டான்டர்டு மற்றும் எஸ்.பி. என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும். டுகாடி ஹைப்பர்மோட்டார்டு 950 முற்றிலும் மாடலாக அறிமுகமாக இருக்கிறது. இந்த மாடலில் மேம்பட்ட ஸ்டைலிங், புதிய என்ஜின், மேம்பட்ட சேசிஸ், சஸ்பென்ஷன் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் அறிமுகமானதும் ஹைப்பர்மோட்டார்டு 950 பழைய ஹைப்பர்மோட்டார்டு 939 மாடலுக்கு மாற்றாக இருக்கும். 2019 ஹைப்பர்மோட்டார்டு 950 மாடலில் 937சிசி டெஸ்டாஸ்டிரெட்டா எல்-டுவின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 114 பி.ஹெச்.பி. பவரை 9000 ஆர்.பி.எம்.-இலும் 96 என்.எம். டார்க் செயல்திறனை 7250 ஆர்.பி.எம்.-இலும் வழங்கும்.



    இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. புதிய என்ஜின் முந்தைய மாடலை விட அதிக கம்ப்ரெஷன் ரேட், புதிய என்ஜின் மேப்பிங், புதிய எக்சாஸ்ட் கேம் ப்ரோஃபைல் மற்றும் 53 எம்.எம். திராட்டிள் கொண்டிருக்கிறது. ஸ்டான்டர்டு டுகாடி ஹைப்பர்மோட்டார்டு 950 மாடலில் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன்புற ஃபோர்க்களும், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்படுகிறது.

    ஹைப்பர்மோட்டார்டு 950 எஸ்.பி. மாடலின் இருபுறங்களிலும் ஓலின்ஸ் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. எஸ்.பி. வேரியண்ட்டில் எடை குறைந்த மர்சீசினி ஃபோர்ஜ்டு சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் எஸ்.பி. வேரியண்ட் எடை ஸ்டான்டர்டு மாடலை விட 2 கிலோ வரை குறைவாகும்.

    டுகாடி ஹைப்பர்மோட்டார்டு 950 சீரிஸ் மாடல்களில் போஷ் கார்னெரிங் ஏ.பி.எஸ்., வீலி கண்ட்ரோல், பல்வேறு ரைடிங் மோட்கள் (ஸ்போர்ட், டூரிங் மற்றும் அர்பன்), புதிய 4.3 இன்ச் டி.எஃப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிராக்‌ஷன் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×