search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் எண்ட்ரி-லெவல் லேண்ட் ரோவர் டிஸ்கவரி அறிமுகம்
    X

    இந்தியாவில் எண்ட்ரி-லெவல் லேண்ட் ரோவர் டிஸ்கவரி அறிமுகம்

    லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் எண்ட்ரி-லெவல் டிஸ்கவரி மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.



    லேண்ட் ரோவர் நிறுவனம் தனது எண்ட்ரி-லெவல் டிஸ்கவரி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய எண்ட்ரி-லெவல் லேண்ட் ரோவர் டிஸ்கவரி காரின் விலை ரூ.75.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய டிஸ்கவரி எஸ்.யு.வி. காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய டிஸ்கவரி கார் நான்கு மாடல்களில் கிடைக்கிறது. புதிய 2.0 லிட்டர் இன்ஜினியம் டீசல் யூனிட் ஜெ.எல்.ஆர்.-இன் (ஜாகுவார் லேண்ட் ரோவர்) டர்போ தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.



    புதிய தொழில்நுட்பம் ஒரே என்ஜினில் அதிக செயல்திறன் வழங்க வழி செய்யும். புதிய 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 240 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படுகிறது. லேண்ட் ரோவர் டிஸ்கவரியின் 3.0 லிட்டர் வேரியண்ட்டை விட புதிய பேஸ் வேரியண்ட் விலை ரூ.1.74 லட்சம் வரை குறைவு ஆகும்.

    லேண்ட் ரோவர் டிஸ்கவரி புதிய வேரியண்ட் எஸ்., எஸ்.இ., ஹெச்.எஸ்.இ. மற்றும் ஹெச்.எஸ்.இ. லக்சரி என நான்கு மாடல்களில் கிடைக்கிறது. சிறிய ரக என்ஜின் தவிர லேண்ட் ரோவர் டிஸ்கவரி காரின் மற்ற பாகங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    முந்தைய வேரியண்ட்களை போன்றே புதிய காரிலும் நான்கு வித கிளைமேட் கண்ட்ரோல், 360-டிகிரி சரவுண்ட் கேமரா, அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×