search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    புதிய தொழில்நுட்பத்தில் டேட்சன் கோ இந்தியாவில் அறிமுகம்
    X

    புதிய தொழில்நுட்பத்தில் டேட்சன் கோ இந்தியாவில் அறிமுகம்

    டேட்சன் இந்தியா நிறுவனம் இந்தியாவில் கோ மற்றும் கோ பிளஸ் கார் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.



    டேட்சன் இந்தியா நிறுவனம் மேம்பட்ட கோ மற்றும் கோ பிளஸ் கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இரு மாடல்களிலும் இம்முறை வெஹிகிள் டைனமிக் கண்ட்ரோல் டெக்னாலஜி (VDC) எனும் புதிய தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கார்களில் இத்தகைய தொழில்நுட்பம் வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

    புதிய VDC தொழில்நுட்பம் வாகனத்தின் வேகம், ஸ்டீகரிங் வீல் நிலை மற்றும் அக்செல்லரேஷன் உள்ளிட்டவற்றை பொருத்து எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் வழங்குகிறது. இத்துடன் பாதுகாப்பான டிரைவிங் அனுபவத்தையும் இது வழங்குகிறது. 



    புதிய கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களில் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பிரேக் அசிஸ்ட் மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவையும் வழங்கபப்ட்டுள்ளது. புதிய பாதுகாப்பு வசதிகளுடன் டேட்சன் கோ ஹேட்ச்பேக் கார் விவிட் புளு எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. இதுதவிர இரு மாடல்களிலும் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 

    டேட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்களில் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 104 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.



    டேட்சன் கோ ஹேட்ச்பேக் மாடலின் விலை ரூ.3.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் கோ பிளஸ் மாடல் விலை ரூ.5.02 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று கோ பிளஸ் எம்.பி.வி. கார் மாடல் விலை ரூ.3.86 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் டாப்-எண்ட் மாடல் விலை ரூ.5.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×