search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் டி.வி.எஸ். மோட்டார்ஸ்
    X

    விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் டி.வி.எஸ். மோட்டார்ஸ்

    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #TVSMotors



    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 2018 ஆட்டோ எக்ஸ்போவில் டி.வி.எஸ். க்ரியான் கான்செப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து டி.வி.எஸ். நிறுவன தலைமை செயல் அதிகாரி கே.என். ராதாகிருஷ்னா டி.வி.எஸ். நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த நிதியாண்டில் அறிமுகமாகும் என தெரிவித்தார். 

    2019 வருவாய் விளக்கக்கூட்டத்தில் பேசிய கே.என். ராதாகிருஷ்னா, "எலெக்ட்ரிக் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்திருக்கிறோம். இந்த நிதியாண்டில் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். அறிமுக தேதி நெருங்கும் போது இதுபற்றி கூடுதல் விவரங்களை வழங்க முடியும்." என தெரிவித்தார்.

    டி.வி.எஸ். க்ரியான் கான்செப்ட் எலெக்ட்ரிக் வாகனத்தில் பல்வேறு ஸ்மார்ட் கனெக்ட்டெட் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன. இவை இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. காட்சிப்படுத்தப்பட்ட க்ரியான் ஸ்கூட்டரின் டி.எஃப்.டி. ஸ்கிரீனில் ஜி.பி.எஸ்., நேவிகேஷன் மற்றும் ஜியோ-ஃபென்சிங் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன.



    இவற்றுடன் வழக்கமான ஸ்பீடோமீட்டர், டேகோமீட்டர், ட்ரிப் இன்டிகேட்டர், பேட்டரி விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இத்துடன் கஸ்டம் ரைடிங் மோட்கள், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், கனெக்டிவிட்டி, ஆன்டி-தெஃப்ட் அம்சங்கள் மற்றும் பார்க் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

    காட்சிப்படுத்தப்பட்ட டி.வி.எஸ். க்ரியான் ஸ்கூட்டரில் டைமண்ட்-கட் அலாய் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், ஆஃப்-செட் பின்புற மோனோ-ஷாக், டியூப்லெஸ் டையர்கள், எல்.இ.டி. லைட்டிங், யு.எஸ்.பி. சார்ஜர் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது. இந்த அம்சங்கள் அனைத்தும் உற்பத்தி மாடலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    க்ரியான் கான்செப்ட் மாடல் லித்தியம்-அயன் பேட்டரிகளை கொண்டிருக்கும் என்றும் இவை 12 கிலோவாட் திறன் வழங்கும் மோட்டார் உடன் இணைக்கப்பட்டிருந்தது. இந்த பேட்டரியை வெறும் 60 நிமிடங்களில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த வாகனம் 80 கிலோமீட்டர் வரை செல்லும் என டி.வி.எஸ். தெரிவித்திருக்கிறது.
    Next Story
    ×