search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஹூன்டாய் எலன்ட்ரா
    X

    மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் ஹூன்டாய் எலன்ட்ரா

    பல்வேறு புதிய அம்சங்களுடன் ஹூன்டாய் எலான்ட்ரா கார் அறிமுகம். இதன் புதிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #Hyundai



    கொரியாவின் ஹூன்டாய் நிறுவனம் தனது செடான் மாடல் காரான எலன்ட்ராவில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை மலேசியாவில் காட்சிப்படுத்தியது. இடது புறம் ஸ்டீரிங் இருக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே உள்ள எலன்ட்ரா மாடலைக் காட்டிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

    குறிப்பாக இதில் மானுவல் ஏ.சி. வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள மாடலில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி இருந்தது. ஆனால் புதிய மாடலில் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முகப்பு விளக்குகள் புரொஜெக்டர் போல் உள்ளன.



    17 இன்ச் அலாய் சக்கரங்கள், 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு இயங்குதளம், ஆப்பிள் கார் பிளே ஆகியன வசதிகள் வழங்கப்பட்டுள்ள. இத்துடன் ரிவர்ஸ் கேமரா, டயர் காற்றழுத்தத்தை உணர்த்தும் கருவி ஆகியன இதில் உள்ளன.

    இதில் பாதுகாப்பு அம்சங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 6 ஏர் பேக்குகள் உள்ளன. அத்துடன் ஏ.பி.எஸ்., இ.பி.டி. வசதியும், ஸ்டெபிலிடி கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் வழக்கம்போல 2 லிட்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் மாடலும் புழக்கத்தில் உள்ளது. 

    இந்தியாவில் இது அறிமுகமாகும்போது 8 அங்குல தொடுதிரை கொண்டதாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகமாகும்போது அது ஹோன்டா சிவிக், ஸ்கோடா ஆக்டேவியா, டொயோடா கரோலா ஆல்டிஸ் ஆகிய மாடலுக்கு பெரும் போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
    Next Story
    ×