search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்
    X

    இந்தியாவில் ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

    ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #HondaCBR650R



    ஹோன்டா மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் புதிய சி.பி.ஆர்.650ஆர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. 

    புதிய ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மோட்டார்சைக்கிள் விலை ரூ.7.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய சி.பி.ஆப்.650ஆர் மோட்டார்சைக்கிள் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட சி.பி.ஆப்.650எஃப் மோட்டார்சைக்கிளுக்கு மாற்றாக அமைந்திருக்கிறது.

    புதிய ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடல் முன்னதாக 2018 EICMA விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சி.பி.ஆர்.650ஆர் முன்பதிவு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கியது. இதற்கான கட்டணம் ரூ.15,000 என நிர்ணயம் செய்யப்பட்டது. முந்தைய சி.பி.ஆர்.650எஃப் மாடலை விட சி.பி.ஆர்.650ஆர் மாடல் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அந்த வகையில் புதிய சி.பி.ஆர்.650ஆர் மாடலில் டூயல்-ஹெட்லேம்ப் வடிவமைப்பு, எக்ஸ்போஸ்டு என்ஜின் மற்றும் டெயில் பகுதி உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் க்ளிப்-ஆன் ஹேன்டிள்பார்கள், 30எம்.எம். அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டிஜிட்டல் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், செலக்டபிள் டார்க் கண்ட்ரோல், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் க்விக் ஷிஃப்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடலில் 649சிசி, லிக்விட் கூல்டு இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 95 பி.ஹெச்.பி. பவர் @12,000 ஆர்.பி.எம். செயல்திறன், 64 என்.எம். டார்க் @8500 ஆர்.பி.எம். வழங்குகிறது. 2019 ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடலின் முன்புறம் யு.எஸ்.டி. ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

    பிரேக்கிங்கை பொருத்தவரை முன்புறம் டூயல் டிஸ்க் செட்டப், பின்புறம் ஒற்றை டிஸ்க் பிரேக் மற்றும் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. புதிய ஹோன்டா சி.பி.ஆர்.650ஆர் மாடல் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் மற்றும் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.
    Next Story
    ×