search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    விரைவில் இந்தியா வரும் டாடா  எலெக்ட்ரிக் கார்
    X

    விரைவில் இந்தியா வரும் டாடா எலெக்ட்ரிக் கார்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #TataTigor



    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேட்ச்பேக் மாடல்களில் டிகோர் அதிக பிரபலமான மாடலாக இருக்கிறது. இந்நிலையில், டிகோர் மாடலின் எலெக்ட்ரிக் பதிப்பு (பேட்டரியில் ஓடும் காரை) டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்கிறது.

    ஏற்கனவே உள்ள மாடலின் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. காரின் பின்புற பம்பரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல பின்புற விளக்குகள் புதிய வடிவமைப்பு பெற்றிருக்கின்றன. உள்புறம் ஆட்டோமேடிக் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம், சொகுசு வாகனங்களுக்குரிய இருக்கை, இரண்டு ஏர்பேக், சாலையில் நடந்து செல்பவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு, பார்கிங் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. 

    காரின் முன்புற பொனெட் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 40 கிலோவாட் மோட்டார் உள்ளது. இந்த மோட்டார் 4,500 ஆர்.பி.எம். வேகத்தில் 40 பி.ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். முன்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக்கும், பின் புறசக்கரங்களில் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளன. 



    இத்துடன் லாக்கிங் சிஸ்டம், பவர் விண்டோ, பின் இருக்கையில் குழந்தைகள் பாதுகாப்புக்கென பிரத்யேகமாக கதவை பூட்டும் வசதி, பார்க்கிங் சென்சார் ஆகியன உள்ளன. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ. தூரம் வரை ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 80 சதவீத அளவுக்கு சார்ஜ் ஆக 90 நிமிடம் போதுமானது. 

    இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 80 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேம்பட்ட தொழில்நுட்பத்திலான என்ஜின் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டுவதற்கு வசதியான ஸ்டீரிங் அமைப்பு உள்ளது. டிரைவர் துல்லியமாக சாலையைப் பார்க்க இதன் முகப்பு விளக்கு வெளிச்சம் உதவும்.

    பேட்டரி வாகன பிரிவில் தடம் பதித்துள்ள டிகோர் இ.வி. கார் ஏற்கனவே உள்ள மஹிந்திரா இ.2.ஓ. மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் ரெனால்ட் க்விட் இ.வி. காருக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×