search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டாடா அல்ட்ரோஸ் மற்றும் அல்ட்ரோஸ் எலெக்ட்ரிக் கார்கள் ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம்
    X

    டாடா அல்ட்ரோஸ் மற்றும் அல்ட்ரோஸ் எலெக்ட்ரிக் கார்கள் ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ரோஸ் மற்றும் அல்ட்ரோஸ் எலெக்ட்ரிக் கார்களை ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #TataAltroz



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புத்தம் புதிய அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் மாடலை 2019 ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்தது.

    அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் வடிவமைப்பை பார்க்க ஹேரியர் எஸ்.யு.வி. போன்றே காட்சியளிக்கிறது. காரின் முன்புறம் டாடா ஹியூமானிட்டியின் மெல்லிய வடிவம் கொண்ட கிரில், ஹேரியர் மாடலில் இருப்பதை போன்ற ஸ்ப்லிட் லைட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

    பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது அல்ட்ரோஸ் வடிவமைப்பு முற்றிலும் புதிதாக காட்சியளிக்கிறது. ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகமான அல்ட்ரோஸ் காரில் 5-ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் பிளாக்டு அவுட் ரூஃப் வழங்கப்பட்டுள்ளது.



    காரின் பின்புறம் மெல்லிய ரேக் செய்யப்பட்டு ஸ்பாயிலர் மிக அழகாக காட்சியளிக்கிறது. பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய கார்களின் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷனின் மோட்டார் பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

    புதிய அல்ட்ரோஸ் கார் நெக்சான் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலில் வழங்கப்பட்டிருக்கும் என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் அதிக செயல்திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×