search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் டொயோட்டா இன்னோவா புது வேரியண்ட் அறிமுகம்
    X

    இந்தியாவில் டொயோட்டா இன்னோவா புது வேரியண்ட் அறிமுகம்

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் புதிய இன்னோவா க்ரிஸ்டா கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #Toyota #InnovaCrysta



    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் புதிய இன்னோவா க்ரிஸ்டா கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் வேரியண்ட் இந்தியாவில் ரூ.15.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எட்டு பேர் அமரக்கூடிய காரும் அறிமுகமாகியிருக்கிறது. இதன் விலை ரூ.15.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஜி பிளஸ் வேரியண்ட் இன்னோவா க்ரிஸடா மாடல்களில் பேஸ் வேரியண்ட் ஆகும். ஜி பிளஸ் வேரியண்ட் தனியார் மற்றும் போக்குவரத்து பயன்பாடு என இருவிதங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக ஜி வேரியண்ட் போக்குவரத்து பயன்பாடுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டது.



    டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் வேரியண்ட் முந்தைய ஜி.எக்ஸ். மாடலை விடபேஸ் வேரியண்ட் ஆகும். புதிய பேஸ் மாடலில் மியூசிக் சிஸ்டம், சென்ட்ரல் ஆரம்ரெஸ்ட், பின்புற டீஃபாகர் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறாது. இதே வசதிகள் ஜி.எக்ஸ். மாடலில் வழங்கப்பட்டிருந்தது.

    எனினும், இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் மாடலில் பின்புற சென்சார்/கேமரா, ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. டூயல் முன்பக்க ஏர்பேக்கள், ஐசோஃபிக்ஸ், சீட்பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 16-இன்ச் அலாய் வீல், ஹாலோஜென் ஹெட்லேம்ப்கள், பின்புற ஸ்பாயிலர், மேனுவல் ஏ.சி. வென்ட் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.

    புதிய இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் மாடலில் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 150 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 343 என்.எம். டார்க் செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. புதிய இன்னோவா க்ரிஸ்டா ஜி பிளஸ் வேரியண்ட் மூலம் இன்னோவா பேஸ் வேரியண்ட் விலை ரூ.38,000 வரை குறைந்திருக்கிறது.
    Next Story
    ×