search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கேடு விளைவிக்காத காகித பேட்டரி
    X

    கேடு விளைவிக்காத காகித பேட்டரி

    பார்சிலோனாவை சேர்ந்த தனியார் நிறுவனம் பேப்பரை மட்டும் மூலப்பொருளாக கொண்டு புதுவகை பேட்டரிக்களை உருவாக்கி இருக்கிறது. #GreenEnergy



    ஆட்டோமொபைல் மற்றும் தொழில்நுட்ப சந்தையில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் பொதுவாக லித்தியம் மூலம் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் விஷத்தன்மை உள்ளதால் மண்ணிற்கு மிகவும் கேடு விளைவிக்க கூடியவை. 

    தற்சமயம் பேட்டரி மூலம் இயங்கும் சிறிய கருவிகள் மற்றும் சாதனங்களிலும் வேறு வழியின்றி இதுபோன்ற பேட்டரிகளையே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனை மாற்றும் முயற்சியில் களமிறங்கிய தனியார் நிறுவனம் விடாமுயற்சியுடன் மேற்கொண்ட ஆய்வில் வெற்றி கண்டுள்ளது.



    பார்சிலோனாவை சேர்ந்த நிறுவனம் பியூலியம் என்னும் புதிய வகை பேட்டரி ஒன்றை உருவாக்கியுள்ளது. காகிதத்தை மூலப்பொருளாக கொண்டு இந்த பேட்டரி தயாரிக்கப்படுகிறது. மேலும் லித்தியம் பேட்டரிகளை போன்று இல்லாமல், இவற்றை ஒரு முறை பயன்படுத்தினாலும், மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.

    பேட்டரி என்றதும் இதனை எடுத்த எடுப்பிலேயே கார்களுக்கு சக்தியூட்ட முடியாது. எனினும், இவைகளை கொண்டு மருத்துவ துறையில் பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படும் கருவிகளை சக்தியூட்ட முடியும். இந்த புதுவித பேட்டரிகளை கொண்டு மறுசுழற்சி செய்ய முடியாத ஒருமுறை பயன்படுத்தக்கூடிய சாதனங்களில் சக்தியூட்ட முடியம். 

    சர்க்கரை நோயாளிகள் ரத்த பரிசோதனை செய்து கொள்வதற்கும், கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ளவும் இந்த பேட்டரியை பயன்படுத்தலாம். உபயோகித்த இந்த பேட்டரியை தூக்கி எறியாமல் மீண்டும் பயன்படுத்தலாம். ரத்தம் மற்றும் சிறுநீரைக் கொண்டே தேவையான ஆற்றலை பெற்றுக் கொள்கிறது இந்த பியூலியம் பேட்டரி.
    Next Story
    ×