search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கே.டி.எம். டியூக் 790 முன்பதிவு துவக்கம்
    X

    கே.டி.எம். டியூக் 790 முன்பதிவு துவக்கம்

    கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டியூக் 790 மோட்டார்சைக்கிளின் முன்பதிவுகள் துவங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #KTM #Duke790



    கே.டி.எம். தனது டியூக் 790 மோட்டார்சைக்கிளை மார்ச் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இத்தாலியில் நடைபெற்ற 2017 EICMA விழாவில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகமானது.

    ரஷ்லேன் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி கே.டி.எம். இந்தியா விற்பனையாளர்கள் புதிய டியூக் 790 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை துவங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய டியூக் 790 முன்பதிவு கட்டணம் ரூ.10,000 என்றும் இத்தொகை திரும்ப வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    மார்ச் 2019இல் புதிய டியூக் 790 அறிமுகமாகும் என்றும் இதன் விலை ரூ.8.0 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக கே.டி.எம். நிறுவனம் விரைவில் 500சிசி பேரலெல் ட்வின் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தது.



    புதிய டியூக் 790 அறிமுகத்திற்காக இந்திய கே.டி.எம். ப்ரியர்கள் பல மாதங்களாக காத்திருக்கும் நிலையில், இதன் விலை நிச்சயம் அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற செயல்திறன் வழங்குவதில் கே.டி.எம். தயாரிப்புகள் நற்பெயர் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் டியூக் 790 வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் என கூறப்படுகிறது.

    கே.டி.எம். டியூக் 790 மோட்டார்சைக்கிளுக்கான பாகங்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு பஜாஜ் ஆட்டோவின் சக்கன் தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படுகிறது. தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் கே.டி.எம். மாடல்கள் இதே தயாரிப்பு ஆலையில் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை கே.டி.எம். டியூக் 790 மாடலில் 799சிசி LC8c பேரலெல்-ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 85 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

    இத்துடன் டி.எஃப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, எல்.இ.டி. ஹெட்லைட், கார்னெரிங் ஏ.பி.எஸ்., க்விக் ஷிஃப்டர், ரைடு-பை வையர், டி.சி.எஸ். மற்றும் லான்ச் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    Next Story
    ×