search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் புதுவித தொழில்நுட்பத்துடன் ஹீரோ மோட்டார்சைக்கிள் அறிமுகம்
    X

    இந்தியாவில் புதுவித தொழில்நுட்பத்துடன் ஹீரோ மோட்டார்சைக்கிள் அறிமுகம்

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் தனது HF டீலக்ஸ் IBS i3S மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #HERO #motorcycle



    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் HF டீலக்ஸ் IBS i3S மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய மோட்டார்சைக்கிளில் இன்டகிரேட்டெட் பிரேக்கிங் சிஸ்டம் (IBS) தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளின் துவக்க விலை ரூ.49,067 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹீரோ HF டீலக்ஸ் IBS மோட்டார்சைக்கிளின் முன்பதிவு துவங்கியுள்ள நிலையில், இவை ஹீரோ விற்பனை மையங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. ஹீரோ HF டீலக்ஸ் IBS மாடல் i3S தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்கள் விரும்பினால் தேர்வு செய்து கொள்ளும் வசதியுடன் வழங்கப்படுகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் i3S தொழில்நுட்பம் மோட்டார்சைக்கிளுக்கு அதிகளவு மைலேஜ் மற்றும் குறைந்தளவு மாசு வெளிப்படுத்தும். IBS பிரேக் சிஸ்டம் தவிர HF டீலக்ஸ் மோட்டார்சைக்கிளில் பெரிய டிரம் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டீலக்ஸ் மோட்டார்சைக்கிள் ஹெவி கிரீன் எனும் புதிய நிறத்திலும் கிடைக்கிறது.



    புதிய HF டீலக்ஸ் மோட்டார்சைக்கிளின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் i3S தொழில்நுட்பத்திற்கு நீல நிற விளக்கு, ஸ்டான்டு வார்னிங் மற்றும் எரிபொருள் அளவு உணர்த்தும் மின்விளக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர இந்த மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

    ஹீரோ HF டீலக்ஸ் மோட்டார்சைக்கிளில் 92.2சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.36 பி.ஹெச்.பி. பவர், 8.05 என்.எம். டார்க் மற்றும் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்களும், பின்புறம் 2-ஸ்டெப் ஷாக் அப்சார்பர்களும் வழஹ்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×