search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    புதிய அவதாரம் எடுக்கும் ஹோன்டா அமேஸ்
    X

    புதிய அவதாரம் எடுக்கும் ஹோன்டா அமேஸ்

    ஹோன்டா கார்ஸ் இந்தியா விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் இரண்டாம் தலைமுறை அமேஸ் மாடலில் புதிய இன்ஜின் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஹோன்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் விரைவில் இந்தியவில் அறிமுகம் செய்ய இருக்கும் இரண்டாம் தலைமுறை அமேஸ் செடான் காரினை இந்தியாவில் வெளியிட இருக்கிறது. 

    ஏற்கனவே 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சியளித்த அமேஸ் கார் புத்தம் புதிய பிளாட்ஃபார்ம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மே மாத வாக்கில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய அமேஸ் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி விட்டது. பயனர்கள் புதிய அமேஸ் வாங்க ரூ.21,000 முன்பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய அமேஸ் மாடல் இந்தியாவில் முதல் முறையாக டீசல் சிவிடி தொழில்நுட்பம் கொண்ட மாடலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இத்துடன் மேம்படுத்தப்பட்ட சிவிடி இன்ஜின் கொண்ட முதல் ஹோன்டா மாடல் என்ற பெருமையை பெறுவதோடு, இந்த தொழில்நுட்பத்தை பெறும் முதல் சந்தையாகவும் இந்தியா இருக்கும். இந்தியாவில் அறிமுகமான அமேஸ் பல்வேறு அம்சங்களை இந்தியாவில் முதல் முறையாக வழங்கி இருந்தது.

    புதிய தலைமுறை அமேஸ் முகமானது அக்கார்டு மாடலில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. புத்தம் புதிய கிரில், புதிய வடிவமைப்பு கொண்ட ஹெட்லேம்ப் கிளஸ்டர் மற்றும் புதிய பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. வெளிப்புற தோற்றம் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், உள்புறம் மிக குறைந்தளவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    உள்புறம் மிகப்பெரிய மாற்றமாக இதன் 7.0 இன்ச் தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனினை இணைத்து கொள்ளும் வசதி, நேவிகேஷன் மற்றும் பல்வேறு இதர வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×