search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் ஹோன்டா சிபிஆர் 250ஆர் மற்றும் சிபி ஹார்னெட் 160 ஆர் வெளியானது
    X

    இந்தியாவில் ஹோன்டா சிபிஆர் 250ஆர் மற்றும் சிபி ஹார்னெட் 160 ஆர் வெளியானது

    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2018 சிபிஆர் 250ஆர் மற்றும் சிபி ஹார்னெட் 160ஆர் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2018 சிபிஆர் 250ஆர் மற்றும் சிபி ஹார்னெட் 160ஆர் மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிள்களின் விலை அந்நிறுவன அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

    புதிய 2018 சி.பி.ஆர். 250ஆர் மாடலில் ஃபுல்-எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் பொசிஷன் லேம்ப் வழங்கப்பட்டிருக்கிறது. 2018 மாடல்: மார்ஸ் ஆரஞ்சு மற்றும் ஸ்டிரைக்கிங் கிரீன் என இரண்டு வித நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

    புதிய சி.பி.ஆர். 250ஆர் மாடலில் 249.6சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் வழங்கபப்ட்டுள்ளது. இந்த இன்ஜின் 26 பி.ஹெச்.பி. பவர், 22.9 டார்கி.யூ மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இதே இன்ஜின் ஹோன்டாவின் முந்தைய சி.பி.ஆர். 250 மாடலிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



    இதுதவிர 2018 சி.பி.ஆர். 250ஆர் மாடலில் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ப்ரோ-லின்க் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்பக்கம் 296 மில்லிமீட்டரும், பின்புறம் 220மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. 2018 சி.பி.ஆர். 250 ஆர் மாடலில் டூயல்-சேனல் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) வழங்கப்பட்டுள்ளது.

    ஹோன்டா சிபி ஹார்னெட் 160ஆர் மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் விரும்பும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளும் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. புதிய கிராஃபிக்ஸ் கொண்டிருக்கும் புதிய ஹார்னெட் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் கொண்டிருக்கிறது.

    ஸ்டான்டர்டு (முன்பக்கம் டிஸ்க், பின்புறம் டிரம்), சிபிஎஸ் (இரண்டு டிஸ்க் பிரேக்), ஏபிஎஸ் ஸ்டான்டர்டு (முன்பக்கம் டிஸ்க், பின்புறம் டிரம்), ஏபிஎஸ் டீலக்ஸ் (இரண்டு டிஸ்க் பிரேக்) என புதிய ஹோன்டா ஹார்னெட் 160 ஆர் நான்கு மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஹோன்டா 2018 சிபிஆர் 250ஆர் மோட்டார்சைக்கிள் விலை ரூ.1,63,584 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) மற்றும் சிபி ஹார்னெட் 160 ஆர் விலை ரூ.84,675 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது. இந்தியா முழுக்க புதிய மோட்டார்சைக்கிள்களின் விநியோகம் துவங்கியுள்ளது.
    Next Story
    ×