search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V அறிமுகம்
    X

    இந்தியாவில் டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V அறிமுகம்

    டிவிஎஸ் மோட்டார் கம்பெணி இந்தியாவில் 2018 அபாச்சி RTR 160 4V மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    டிவிஎஸ் மோட்டார் கம்பெணி நிறுவனம் இந்தியாவில் 2018 அபாச்சி RTR 160 4V மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் அபாச்சி RTR 160 4V விநியோகம் ஒருவாரத்தில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2018 டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V மாடல் 4-வால்வ் பிளாட்ஃபார்ம் சார்ந்த வடிவமைப்பு, புதிய சஸ்பென்ஷன், சேசிஸ் மற்றும் இன்ஜின் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

    புதிய டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V மாடலின் ஒட்டுமொத்த வடிவமைப்பு RTR 200 4V-ஐ தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. கூர்மையான வடிவமைப்பு, டேன்க் ஷ்ரவுட், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், புதிய எல்இடி லைட், மேம்படுத்தப்பட்ட ஷோவா சஸ்பென்ஷன் மற்றும் சேசிஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் மற்றும் முன்புறம் டபுள் பேரல் எக்சாஸ்ட் மஃப்ளர் கொண்டிருக்கிறது. ஆர்.ஆர். ரெட், ரேசிங் புளூ மற்றும் ரேசிங் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V மாடலில் 159சிசி SI, 4 ஸ்ட்ரோக், ஆயில் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.



    இந்த இன்ஜினின் EFI வேரியண்ட் 16 பி.ஹெச்.பி. பவர் 14.8 என்.எம். டார்கியூ மற்றும் கார்ப் வெர்ஷன் 16.2 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இதன் EFI வேரியண்ட் மணிக்கு 0-60 கிலோமீட்டர் வேகத்தை 4.8 நொடிகளில் செல்லும் என்றும் கார்ப் வெர்ஷன் 4.73 நொடிகளில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வேரியண்ட்களும் முறையே அதிகபட்சம் 113 கிலோமீட்டர் மற்றும் 114 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    புதிய அபாச்சி RTR 160 4V மாடல் 1357 மில்லிமீட்டர் வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இது தரையில் இருந்து 1050 மில்லிமீட்டர் உயரம், 2050 மில்லிமீட்டர் நீலம், 790 மில்லிமீட்டர் அகலம் மற்றும் 180 மில்லிமீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கிறது. இதன் எடை டிரம் வேரியண்ட் 143 கிலோவும், டிஸ்க் வேரியண்ட் 145 கிலோ ஆகும். 

    டிவிஎஸ் அபாச்சி RTR 160 இந்தியாவில் 2005-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது அபாச்சி சீரிஸ்-இன் முதல் மாடலாக அமைந்தது. தற்சமயம் அறிமுகமாகி இருக்கும் அபாச்சி RTR 160 4V கார்ப் முன்பக்க டிஸ்க் பிரேக் மாடல் விலை ரூ.81,490 (எக்ஸ்-ஷோரூம்), கார்ப் டபுள் டிஸ்க் வேரியண்ட் விலை ரூ.84,490 (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் EFI டூயல் டிஸ்க் பிரேக் மாடல் விலை ரூ.89,990 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×