search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ அறிமுகம்
    X

    இந்தியாவில் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ அறிமுகம்

    ஃபோக்ஸ்வேகன் போலோ புதிய இன்ஜின் கொண்ட மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய இன்ஜின் மாடலின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    ஃபோக்ஸ்வேகன் போலோ 1-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய இன்ஜின் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

    முந்தைய 1.2 லிட்டர் மாடல் லிட்டருக்கு 16.47 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கிய நிலையில், புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 18.78 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் இன்ஜின் மாடல் 75 பி.ஹெச்.பி. பவர் @ 6200 ஆர்.பி.எம். செயல்திறன் கொண்டிருக்கிறது.

    முந்தைய 1.2 லிட்டர் மாடலில் 110 என்.எம். டார்கியூ @ 3000-4300 ஆர்.பி.எம். வழங்குகிறது. அனைத்து வேரியண்டகளிலும் 1.2 லிட்டர் இன்ஜினுக்கு மாற்றாக புதிய இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. புதிய 1.0 லிட்டர் யூனிட் மாடல் முந்தைய மாடலை விட 18 கிலோ எடை குறைவாகவும், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    ஃபோக்ஸ்வேகன் போலோ GT TSI மாடலில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்கியூ மற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. டீசல் ஆப்ஷனை பொருத்த வரை 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் யூனிட் வழங்கப்படுகிறது. 

    1.5 லிட்டர் டீசல் இன்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 230 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் போலோ மாடல் 108 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

    இந்தியாவில் 1.0 ல்ட்டர் இன்ஜின் கொண்ட ஃபோக்ஸ்வேகன் போலோ விலை ரூ.5.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×