search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    விரைவில் வெளியாகும் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125
    X

    விரைவில் வெளியாகும் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125

    சுசுகி நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்த சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125சிசி ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    சுசுகி நிறுவனம் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் மாடலை சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் சுசுகி அறிமுகம் செய்தது. அறிமுக நிகழ்வில் பலரையும் கவர்ந்த பர்க்மேன் ஸ்ட்ரீட் விரைவில் இந்தியாவில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி சுசுகி பர்க்மேன் இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் சுசுகி பர்க்மேன் 125 விலை ரூ.75,000 (ஆன்-ரோடு) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்கூட்டர் 2019-ம் ஆண்டு இந்தியாவில் வெளியாகலாம் என தெரிவித்தன.

    புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 சிசி ஸ்கூட்டரின் பெயர் சுசுகி சர்வதேச சந்தையில் சுசுகி ஏற்கனவே விற்பனை செய்து வரும் ஃபிளாக்ஷிப் மாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் இந்த ஸ்கூட்டர் வெவ்வேறு இன்ஜின்களில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டர் பிரத்யேகமான ஐரோப்பிய வடிவமைப்புடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. 



    புதிய ஸ்கூட்டரில் எல்.இ.டி. ஹெட்லேம்ப், பாடி-மவுண்ட் விண்ட்ஸ்கிரீன், மல்டி-ஃபன்க்ஷன் கீ ஸ்லாட் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்பக்க சக்கரத்திற்கு டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் சுசுகி அக்செஸ் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஜின் புதிய பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 சிசி மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8.6 பி.ஹெச்.பி பவர் @6500 ஆர்.பி.எம். மற்றும் 10.2 என்.எம். டார்கியூ @5000 ஆர்.பி.எம். செயல்திறன் கொண்டுள்ளது. 

    சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125சிசி ஸ்கூட்டரில் அதிக இட வசதி கொண்ட ஸ்டோரேஜ், 12 வோல்ட் சார்ஜிங் சாக்கெட், டியூப்லெஸ் டையர் மற்றும் எல்.இ.டி. டெயில்லேம்ப் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 10.5 லிட்டர் ஃபியூயல் டேன்க் வழங்கப்பட்டுள்ளது. 

    பல்வேறு நிறங்களில் அசத்தலாக வெளியாக இருக்கும் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மாடல் இந்தியாவில் ஹோன்டா ஆக்டிவா 125, டி.வி.எஸ். என்டார்க் 125, ஹோன்டா கிரேசியா மற்றும் புத்தம் புதிய அப்ரிலியா எஸ்.ஆர். 125 ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×