search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350X மற்றும் 500X அறிமுகம்
    X

    இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350X மற்றும் 500X அறிமுகம்

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு 350X மற்றும் 500X மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தண்டர்பேர்டு 350X மற்றும் 500X மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய தண்டர்பேர்டு X மாடல்கள் முந்தைய மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் புதிய மாடல்களிலும் முந்தைய மாடல்களில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஜின்களே வழங்கப்பட்டுள்ளன.

    புதிய தண்டர்பேர்டு 350X மாடலில் 346சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 19 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது. தண்டர்பேர்டு 500X மாடலில் 499சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 41.3 என்.எம். டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 

    புதிய தண்டர்பேர்டு X மோட்டார்சைக்கிள்களின் வடிவமைப்பு ஒட்டுமொத்தமாக முந்தைய மாடல்களை போன்று காட்சியளிக்கிறது. எனினும் சில அம்சங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பக்கம் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப், ப்ரோஜெக்டர் லைட், எல்.இடி. டி.ஆர்.எல். மற்றும் மேட் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது.

    ஃபியூயல் டேன்க் வடிவைப்பிலும் மாற்றம் செய்யப்படாமல், அதிக பிரகாசமான நிறம் பூசப்பட்டுள்ளது. தண்டர்பேர்டு X மாடலில் புதிய கன்ஸ்லிங்கர் சிங்கிள் சீட் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான தண்டர்பேர்டு மாடலில் ஸ்ப்லிட் சீட் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. 



    இதுதவிர புதிய தண்டர்பேர்டு X மோட்டார்சைக்கிளில் அலாய் வீல் மற்றும் ரிம் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் எல்.இ.டி. டெயில் லைட் மற்றும் புதிய கிராப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350X மற்றும் தண்டர்பேர்டு 500X மோட்டார்சைக்கிள்கள் ட்ரிஃப்டர் புளூ, கெட்-அவே ஆரஞ்சு, ரோவிங் ரெட் மற்றும் விம்சிகல் வைட் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.

    முன்பக்கம் மட்கார்டு, சைடு பேனல்கள், ரியர் டிஃபென்டர், முன்பக்க ஃபோர்க், சஸ்பென்ஷன், எக்சாஸ்ட் உள்ளிட்டவை கருப்பு நிறம் கொண்டிருக்கின்றன. புதிய தண்டர்பேர்டு 350X மற்றும் 500X மோட்டார்சைக்கிள்களின் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டிருப்பதோடு வழக்கமான அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் கொண்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு X மாடல்களில் 9-ஸ்போக் அலாய் வீல் மற்றும் MRF நைலோக்ரிப் சேப்பர் டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்பட்டுள்ளது.
     
    இந்தியாவில் தண்டர்பேர்டு 350X மாடலின் விலை ரூ.1.56 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி), தண்டர்பேர்டு 500X விலை ரூ.1.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×