search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ரூ.1,500க்கு ப்ளூடூத் ஹெல்மெட் - மாணவர்கள் அசத்தல்
    X

    ரூ.1,500க்கு ப்ளூடூத் ஹெல்மெட் - மாணவர்கள் அசத்தல்

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இரண்டு பொறியியல் மாணவர்கள் ஹெட்போன் மற்றும் ப்ளூடூத் வசதியுடன் கூடிய ஹெல்மெட் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் குர்பர்கா மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பொறியியல் மாணவர்கள் ஓட்டுநர்களுக்கு வழிகாட்டும் ஹெல்மெட் ஒன்றை உருவாக்கியுள்ளனர். 

    வழக்கமாக காட்சியளிக்கும் ஹெல்மெட்டில் ப்ளூடூத் மற்றும் ஹெட்போன்களை இணைத்திருக்கின்றனர். இதில் உள்ள ப்ளூடூத் கொண்டு ஸ்மார்ட்போனில் இணைத்து ஜி.பி.எஸ். மேப் கூறும் வழியை ஹெட்போனில் கேட்டறிந்து கொள்ள முடியும். இதனால் வாகனம் ஓட்டும் போது இடையிடையே ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.

    வழிதெரியாத இடங்களில் பயணிக்கும் போது ஸ்மார்ட்போன் மேப் கூறும் வழியை ஹெல்மெட்டில் இருக்கும் ஹெட்போன் மூலம் கேட்டு இடையூறின்றி பயணம் செய்யலாம். ஹெல்மெட்டில் உள்ள ஹெட்போன்கள் ப்ளூடூத் மூலம் வேலை செய்கிறது.

    கலாபுராகியில் உள்ள பி.டி.ஏ. கல்லூரியில் பொறியியல் பயின்று வரும் யோகேஷ் மற்றும் அபிஜீத் புதிய ஹெல்மெட்டை உருவாக்கி இருக்கின்றனர். சந்தையில் ப்ளூடூத் வசதி கொண்ட ஹெல்மெட்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த கண்டுபிடிப்பு விலை அனைவரும் வாங்கும் படி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

    சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ப்ளூடூத் ஹெல்மெட்களின் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்கள் உருவாக்கியிருக்கும் ஹெல்மெட் விலை ரூ.1,500 என தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×