search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மீண்டும் இந்தியா வரும் ஸ்கோடா ஆக்டாவியா ஆர்.எஸ்.
    X

    மீண்டும் இந்தியா வரும் ஸ்கோடா ஆக்டாவியா ஆர்.எஸ்.

    ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டாவியா ஆர்.எஸ். கார் மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    கார்களைத் தயாரிக்கும் ஸ்கோடா நிறுவனம் தனது பிரபல மாடல் ஆர்.எஸ். ரக கார்களை மீண்டும் இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ஆர்.எஸ். 245 மாடல் முந்தைய மாடலைக் காட்டிலும் 15 ஹெச்.பி. கூடுதல் திறன் கொண்டது. இது 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. இந்த ஆர்.எஸ். மாடல் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்த மாடல் தொடக்கத்தில் 300 மட்டுமே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு விற்பனை செய்யப்பட்டது. கூடுதலாக முன்பதிவுகள் இருக்கவே 200 கார்களை மேலும் இறக்குமதி செய்து விற்பனை செய்தது. அதன் பிறகு இந்த மாடல் விற்பனையை ஸ்கோடா முற்றிலுமாக நிறுத்திவிட்டது.

    இப்போது வெளிநாட்டிலிருந்து கார்களை இறக்குமதி செய்து விற்பதற்கான விதிமுறைகளை அரசு தளர்த்திஉள்ளது. புதிய விதிமுறையின்படி நிறுவனங்கள் ஆண்டுக்கு 2,500 கார்களை முழுதாகவோ அல்லது உதிரி பாகங்களாகவோ இறக்குமதி செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. 



    இதன் காரணமாக ஆர்.எஸ். மாடல் கார்களை இந்தியாவில் மீண்டும் விற்பனை செய்ய ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் கரோக் மாடல் இந்த முறையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட உள்ள ஆர்.எஸ். மாடல் காரானது ஐரோப்பிய நாடுகளில் அதிகம் விரும்பும் வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டதாகும். 

    இது இந்திய மாடலைக் காட்டிலும் 15 மி.மீ. உயரம் குறைவு. ஆனால் சக்கரங்கள் 18 அங்குலம் கொண்டவை. இதில் 10.25 அங்குல தொடுதிரை, ஸ்போர்ட்ஸ் வியூ, விர்ச்சுவல் காக்பிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. முந்தைய 230 ஹெச்.பி. திறன் கொண்ட ஆக்டாவியா ஆர்.எஸ். விலை ரூ.25.50 லட்சமாகும். 

    இந்தியாவில் புதிய ஸ்கோடா ஆக்டாவியா ஆர்.எஸ். மாடல் விலை ரூ.40 லட்சமாக இருக்கும் எனத் தெரிகிறது. இறக்குமதி செய்யப்படும் காருக்கு இந்த விலை தருவதற்கும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதனால் ஆர்.எஸ். மாடல் பெரும் வரவேற்பைப் பெறும் என நிறுவனம் கருதுகிறது.
    Next Story
    ×