search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹோன்டா எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் அதிகாரப்பூர்வ விவரங்கள்
    X

    ஹோன்டா எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் அதிகாரப்பூர்வ விவரங்கள்

    ஹோன்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஜப்பான் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஹோன்டா தனது எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் இ ப்ரோடோடைப் என்ற பெயர் கொண்டிருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

    முன்னதாக இந்த கார் 2017 ஃபிரான்க்புர்ட் மோட்டார் விழா மற்றும் ஜெனிவா மோட்டார் விழாக்களில் பிரீவியூ செய்யப்பட்டது. இத்துடன் அடுத்த தலைமுறை ஜாஸ் கார் மாடல் ஹைப்ரிட் பவர்டிரெயின் உடன் வெளியாகும் என்றும் ஹோன்டா தெரிவித்துள்ளது.

    2017 ஆம் ஆண்டு ரெட்ரோ-ஸ்டைல் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரை ஹோன்டா நிறுவனம் அறிமுகம் செய்தது. முன்னதாக ஜெனிவா மோட்டார் விழாவில் ஹோன்டா தனது இ ப்ரோடோடைப் மாடலை அறிமுகம் செய்தது. மேலும் இந்த கார் உற்பத்திக்கு தயாராகி இருப்பதாக ஹோனடா தெரிவித்தது. 



    ஹோன்டா இ சிறிய காராக உருவாகி வருகிறது. இது 3895 எம்.எம். நீளம், 1750 எம்.எம். அகலம் மற்றும் 1495 எம்.எம். உயரம் கொண்டிருக்கிறது. ஹோன்டா இ கார் முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. ஹோன்டாவின் எலெக்ட்ரிக் இ ஹேட்ச்பேக் காரின் உயரம் சிலருக்கு சவுகரியமற்றதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    எனினும், இதுவரை ஐரோப்பாவில் மட்டும் ஹோன்டா எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் காருக்கு 22,000 பேர் விருப்பம் தெரிவித்திருப்பதாக ஹோன்டா அறிவித்துள்ளது. இத்துடன் ஹோன்டா தனது அனைத்து வாகனங்களையும் எலெக்ட்ரிக் வடிவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

    ஹோன்டா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஜாஸ் கார் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்டிருக்கும் என்றும் உறுதியாக தெரிவித்திருக்கிறது. இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த தலைமுறை ஹோன்டா ஜாஸ் கார் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டோக்யோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    Next Story
    ×